Pages

Saturday, April 1, 2017

அதிரையில் மூளை செயல்திறன் குன்றிய குழந்தைக்கு ரூ.13 ஆயிரம் மருத்துவ நிதி உதவி !

அதிராம்பட்டினம், ஏப்-01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேர்மன் வாடி அருகே வசிப்பவர் தாஹிரா ( 27 ). வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சாகுல்ஹமீது. இத்தம்பதியின் ஷாஹிதா (5) என்ற பெண் குழந்தை பிறந்த 40 வது நாளில் இருந்து குழந்தையின் தலை வழக்கத்திற்கு மாறாக சிறிதாக இருந்ததால் மருத்துவரிடம் மருத்தவப் பரிசோதனை செய்தனர். இதில் குழந்தையின் மூளை செயல் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் நிலையை அறிந்துகொண்ட சாகுல்ஹமீது தனது மனைவியை விட்டு பிரிந்துவிட்டார். கடந்த 5 ஆண்டுகளாக தனது மனைவியோடு எவ்வித தொடர்புமின்றி இருந்து வருகிறார். தற்போது தாஹிரா தனது குழந்தையோடு தனது தாய் ஜெஹபர் நாச்சியாவின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் குழந்தையின் மருத்துவ சிகிச்சையை சென்னை, மதுரை , தஞ்சை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் எடுத்துவந்த போதிலும் குழந்தை பூர்ண நலம் பெறவில்லை. குழந்தைக்கு திடீர் வெட்டு, கை, கால் சோர்வு அடைதல், தொடர் அழுகை உள்ளிட்டவை இருந்து வருகின்றன. ஏழ்மை நிலையில் இருக்கும் இக்குடும்பத்தால் குழந்தைக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த லண்டன் வாழ் சமூக ஆர்வலரும், தொடர்ந்து வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை தானாக முன்வந்து உதவி வரும் எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது வழங்கிய ரூ. 10,500/-ம் மற்றும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அமெரிக்கா வாழ் சமூக ஆர்வலரும், தொடர்ந்து வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வரும் மரைக்கான் என்கிற அப்துல் கபூர் மாதந்தோறும் வழங்கி வரும் ரூ.2500/- ம், ஆகக் கூடுதல் தொகை ரூ. 13 ஆயிரத்தை, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி சிறுமியின் தாய் தாஹிராவிடம் (01-04-2017 ) சனிக்கிழமை காலை வழங்கினார். அருகில் சமூக ஆர்வலரும், மணிச்சுடர் நாளிதழ் மாவட்ட நிருபர் ஏ. சாகுல் ஹமீது, அதிரை நியூஸ் ஆசிரியர் எம். நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர். மருத்துவ நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட சிறுமியின் தாய் கொடையளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

2 comments:

  1. London and Usa brother's big hearted help .....may almighty be with them and rewards them always...warm regards.....ULLANGALIL SIRANDA ULLAM..KODAI ULLAM....U all proved... Let's continue brothers....

    ReplyDelete
  2. Big salutes to bros.. Imtiyaz&Abdul Gafoor

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...