Pages

Thursday, April 6, 2017

ஷார்ஜாவில் 368 கார்கள் சிறைபிடிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்-06
கடந்த 3 மாதங்களில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 120 கார்கள் என இதுவரை சுமார் 368 கார்கள் ஷார்ஜா போலீஸாரின் அதிரடி ரெய்டுகளால் முடக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மீறுவோர் குறிப்பாக கார் ஸ்டண்ட்களில் ஈடுபடுவோர், சட்டவிரோத கார் பந்தையங்களில் ஈடுபடுவோர், பொறுப்பற்ற முறை மற்றும் பிறருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் ஓட்டுபவர்களின் கார்களே இந்த அதிரடி நடவடிக்கைகளில் அதிகம் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் கார் எஞ்சினிலிருந்து அதிகம் சப்தம் ஏற்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டவையும் உண்டு.

இவ்வாறாக 60 நாட்களுக்கு கார் சிறைபிடிக்கப்படுவதுடன் 2000 திர்ஹம் அபராதத்துடன் 23 கரும்புள்ளிகளை சம்பந்தப்பட்ட கார் டிரைவர்கள் பெறவேண்டி இருக்கும். இதே அளவு தண்டனை பிறருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கார்களை இயக்குவோருக்கும் உண்டு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...