Pages

Sunday, April 9, 2017

42,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிறந்த புதிய வரவு !

அதிரை நியூஸ்: ஏப்-09
துருக்கி விமான நிறுவனம் இஸ்தான்புல் நகரிலிருந்து வாரம் இருமுறை ஆப்பிரிக்க நாடுகளான கினியா மற்றும் புருக்கினா பஸோ ஆகிய நாடுகளுக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கினியாவின் (Guinea) கோனக்ரி (Conakry) விமான நிலையத்திலிருந்து புருக்கினா பாஸோவின் (Burkina Faso) அவ்காடோவ்கோ (Ouagadougou) விமான நிலையத்தை நோக்கி சுமார் 42,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலியை தொடர்ந்து அழகிய பெண் குழந்தை ஒன்று விமான பணிப்பெண்களின் உதவியுடன் பிறந்ததால் விமான தரையிறங்கும் போது கூடுதல் பயணி ஒருவருடன் தரையிறங்கியது.

இக்குழந்தை பிறப்பை புதிய இளவரசி என வர்ணித்து துருக்கிய விமானியும் அவரது குழுவினரும் வரவேற்றனர் என்றாலும் இக்குழந்தை பிறந்த நாடு எதுவென்ற விவாதமும் கூடப் பிறந்துள்ளது. ஒரு சிலர் தாயின் நாடே குழந்தையின் பிறந்த நாடு என்றும், சிலர் விமானம் எந்த நாட்டின் மீது பறந்து கொண்டிருக்கும் போது குழந்தை பிறந்ததோ அதையே பிறந்த நாடு என்றும், இல்லையில்லை விமானம் எந்த நாட்டிற்கு சொந்தமானதோ அதுவே அதன் பிறந்த நாடென்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல்களை மேற்கோள்காட்டியும் வாதிட்டு வருகின்றனர்.

இதேபோல் 2015 ஆம் ஆண்டும் கனடா நாட்டின் வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது பிறந்த குழந்தை ஒன்றுக்கு கனடிய குடியுரிமை வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றனர். எப்படியோ உயரப் பிறந்தாலும் தற்போது தாயும் சேயும் நலம்.

Source: The Telegraph / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...