Pages

Wednesday, April 26, 2017

ஓமன் டூரிஸ்ட் விசா ! இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை!!

அதிரை நியூஸ்: ஏப்-26
ஓமன் அரசு டூரிஸ்ட் விசா விண்ணப்பக் கட்டணத்தை 5 ஓமன் ரியாலிலிருந்து 20 ஓமன் ரியாலாக உயர்த்தியது. நடைமுறையிலிருந்த 10 நாட்கள் எனும் டூரிஸ்ட் விசா அனுமதியை 30 நாட்களாகவும் உயர்த்தியுள்ளதுடன் தேவைக்கு ஏற்ப நாட்களை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். தற்போதைய விலை ஏற்றத்தை பக்கத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவை சுமார் 35 ஓமன் ரியாலுக்கு ஈடான தொகையை வசூலிக்கின்றன என்றும் ஒப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியா, சீனா, ஈரான் மற்றும் ரஷ்ய சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வகையில் புதிய ஈ-விசா நடைமுறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டிராவல் மற்றும் சுற்றுலா ஏஜென்ட் அலுவலகங்கள், 3, 4 மற்றும் 5 நட்சத்திர விடுதிகளும் மேற்காணும் நாட்டினருக்காக விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...