Pages

Saturday, April 8, 2017

குரங்குகளால் வளர்க்கப்பட்ட 8 வயது அதிசய சிறுமி மீட்பு (வீடியோ / படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்-08
சில வேளை நம்ப முடியாத நிஜங்களை சந்திக்க வேண்டி வரும் அதில் ஒன்றே இந்த அதிசய சம்பவம்.

ஒரு சில வருடங்களுக்கு முன் 'தி ஜங்கிள் புக்' எனும் பெயரில் வெளியான ஆங்கில திரைப்படம் ஒன்றில் 'மோக்லி' எனப் பெயரிடப்பட்ட சிறுவன் ஒருவன் அடர்ந்த இந்திய காட்டுக்குள் ஓநாய்களால் வளர்க்கப்படுவது போன்று தத்ரூபமாக காட்சிகள் அமைக்கப்பட்டு வெளியானது, இது கற்பனை.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேப்பாள எல்லையில் பஹ்ரைச் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டர்னியகாட் வனவிலங்குகள் சரணாலயத்தில் (Katarniyaghat Wildlife Sanctuary) மேற்படி சினிமா கற்பனையை மெய்ப்பிக்கும் நிகழ்வு ஒன்று நடந்தேறியுள்ளது.

சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் குரங்கு கூட்டம் ஒன்றால் வளர்க்கப்பட்டு, குரங்குகளின் இயல்புகளான (2 கால் + 2 கை) 4 கால்களால் நடப்பது, கையில் எடுத்து உண்ணாமல் நேரடியாக தரையில் வாய்வைத்து உண்ணுவது போன்ற குணங்களுடனும், வெற்றுடம்பு, நீண்ட நகங்கள், அடர்ந்த தலைமுடியுடன் விறகு வெட்டிகளால் கண்டுபிடிக்கப்பட்டு காவலர்களால் குரங்குகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி மீட்கப்பட்டு 8 வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக 2 கால்களால் நடக்கவும், ஓரளவு கைகளால் உணவு உண்ணவும், மருத்துவர்களை கண்டால் புன்னகைக்காவும் துவங்கியுள்ளார் என்றாலும் தற்போதும் பிற மனிதர்களை அருகில் கண்டால் பயந்து அழுதும் வருகிறார்.

தற்போது அவளுக்கு பேசும் பயிற்சி வழங்கப்படுவதுடன் அவளது பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன என்று இச்சிறுமியை மீட்ட போலீஸ் குழுவின் தலைவர் ஏஎஸ்பி தினேஷ் திரிபாதி மற்றும் பஹ்ரைச் மாவட்ட முதன்மை மருத்துவ சூப்பரின்டென்ட் டி.கே. சிங் அவர்களும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சிறுமியை பற்றிய ஒரு வீடியோ கிளிப் 2 தினங்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்தே இச்செய்தி சிறுமி மீட்கப்பட்டு சுமார் 8 வாரங்களுக்குப் பின் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. மேலும், இச்சிறுமியை ஜங்கிள் புக் சினிமா கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் 'மோக்லி' என்றே பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

உலகின் முன்னனி செய்தி நிறுவனங்களான AOL, Times of India, Newyork Post, Khaleej Times, Indian Express, myfox8.com போன்ற அனைத்தும் இச்செய்தியை ஆச்சரியத்துடன் வெளியிட்டுள்ளன.

https://videos.vidible.tv/prod/2017-04/06/58e68b8683b51f48de969ecc_640x360_v1.mp4?b7MzFu89og9AK1dOvO66adWD1Drld8fa6QUywZnHDXUdz_0O_U8KMuu-xy6Q2gzM

தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...