Pages

Tuesday, April 25, 2017

அதிரையில் முழு கடையடைப்பு - பலத்த ஆதரவு ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-25
காவிரி மேலாண்மை வாரியம், வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும், விவசாயக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் 19 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதிரை பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, ஆஸ்பத்திரி சாலை, பெரிய கடைத்தெரு, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருகின்றன.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...