Pages

Tuesday, April 11, 2017

காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் பயிற்சி பட்டறை!

அதிராம்பட்டினம், ஏப்-11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் ஒலியியல் மற்றும் ஒலிப்பியல் ஆகிய தலைப்புகளில் விரிவுரை பயிற்சி பட்டறை நிகழ்ச்சி திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். ஆங்கிலத் துறைத் தலைவர் ஏ. முஹம்மது முகைதீன் முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக மன்னார்குடி எம்.ஆர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் எஸ். மாறன் கலந்துகொண்டு பேசுகையில்; 
ஆங்கில மொழி பேசுவோர் மொழி உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் பேசும் ஆங்கில மொழி இந்தியாவில் பேசும் ஆங்கில மொழி உச்சரிப்போடு ஒப்பிடுகையில் நிறைய வேறுபாடு உள்ளது. ஆங்கில மொழி உச்சரிப்பில் சிறந்த விளங்கவேண்டும் என்றால் பல்வேறு ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வரலாறு, புவியியல் தொடர்பான நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்' என்றார்.

பயிற்சி பட்டறை முடிவில் பேராசிரியை எம்.ஏ தஸ்லீமா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லுாரி இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் என். சேகர் நன்றி கூறினார்.
 
 
 
  
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...