Pages

Tuesday, April 11, 2017

காதிர் முகைதீன் கல்லூரி மகளிர் விடுதி நாள் விழா ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மகளிர் விடுதி நாள் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து பேசுகையில்; 
மாணவிகள் வருங்காலத்தில் வெற்றி பெறுவதற்கு நேர்மை, பணிவு மற்றும் கடின உழைப்பு இருக்க வேண்டும். விடுதி வாழ்க்கையில், மாணவிகள் நிறைய நல்ல விசயங்களை கற்றுக் கொள்ள முடியும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.

விடுதி காப்பாளர் பேராசிரியர் ஓ.சாதிக் தனது உரையில்; 
'மாணவிகளின் முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கை, தொடர்ச்சியான உழைப்பு மற்றும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்' என்றார்.

விடுதி துணைக் காப்பாளர் பேராசிரியை எஸ்.சாபிரா பேகம் வாழ்த்துரை வழங்கினார். விடுதி மாணவி எம்.ஜெயசூர்யா (முதலாம் ஆண்டு வேதியியல்) வரவேற்றுப் பேசினார். விடுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியினை விடுதி மாணவி ஏ.மாலதி (இரண்டாம் ஆண்டு ஆங்கிலம்) தொகுத்து வழங்கினார். விழா முடிவில் எஸ்.தாரணி ((இரண்டாம் ஆண்டு ஆங்கிலம்) நன்றி கூறினார். இவ்விழாவில் விடுதி மாணவிகள், விடுதி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...