Pages

Thursday, April 6, 2017

அமெரிக்கா தடையை சமாளிக்க எமிரேட்ஸ் விமானங்களில் லேப்டாப் சேவை !

அதிரை நியூஸ்: ஏப்-06
7 வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கியை சார்ந்த மொத்தம் 10 விமான நிலையங்களிலிருந்து அமெரிக்கா வரும் விமானங்களில் மொபைல் போன் மற்றும் அவசரகால மருத்துவ கருவிகள் தவிர்த்து லேப்டாப், டேப்லட் போன்ற மின்னனு பொருட்களை விமானத்தினுள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு தடையை பிரிட்டனும் விதித்துள்ளது என்றாலும் ஒருசில வளைகுடா நாடுகளுக்கு இதிலிருந்து விலக்கும் அளித்துள்ளது.

இந்தத் தடையால் பயணிகள் பெரிதும் அவதியுறுவதை தவிர்க்க விமான நிலையங்களின் லாவுஞ்ச் வரை லேப்டாப்களை பயன்படுத்திக் கொள்ளவும் பின் விமான ஏறுமுன் அந்த மின்சாதனங்களை சேகரித்து முறையாக பேக்கிங் செய்து அமெரிக்க விமான நிலையங்களில் இறங்கும் போது திருப்பித்தந்து வருகின்றனர்.

தற்போது முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் ஆரம்பமாக எமிரேட்ஸ் விமானத்தினுள் கைமாற்று கடனாக (Lending service) லேப்டாப்கள் மற்றும் டேப்லட்களை வழங்கி வருகின்றனர். இதில் பயணிகள் தங்களுடைய USBகளை உபயோகித்து பயன்படுத்தி விட்டு விமானம் தரையிறங்குமுன் திருப்பித் தர வேண்டும்.

இதேபோல் கடந்த வாரம் முதல் கத்தார் விமான நிறுவனமும் தனது பிஸ்னஸ் வகுப்பு பயணிகளுக்கு லேப்டாப்களை வழங்கிவருகிறது. எதிஹாத் விமான நிறுவனம் இலவச WIFI வசதியுடன் தனது பிரிமியம் வகுப்பு பயணிகளுக்கு சேவை வழங்கி வருகிறது.

அமெரிக்காவின் இந்தத் தடை மேலும் பல நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் (Homeland Security Secretary ) ஜான் கெல்லி தெரிவித்துள்ளார்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...