Pages

Monday, April 24, 2017

ஷார்ஜா படகில் தீ ! கவனம் சிதறி கடலுக்குள் விழுந்த கார் !!

அதிரை நியூஸ்: ஏப்-24
நேற்று (ஞாயிறு) மாலை 6.30 மணியளவில் ஷார்ஜா காலித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு போக்குவரத்து படகில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அதனருகே உள்ள கோர்னிச் ரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் 1 ஆண் 2 பெண்கள் என 3 பேர் அடங்கிய பாகிஸ்தானிய குடும்பத்தினர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஒரு சில நொடிகள் காரை ஓட்டிக் கொண்டிருந்தவரின் கவனம் படகில் ஏற்பட்ட தீயை நோக்கித் திரும்பியதால் வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புக்களை உடைத்துக் கொண்டு கடலுக்குள் விழுந்தது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் உடனே கடலுக்குள் பாய்ந்து காரில் மாட்டிக் கொண்டிருந்த மூவரையும் மீட்டு அல் குவைத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருகின்றனர்.

இதற்கிடையில், படகில் பற்றிய தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. அப்போது படகில் சரக்குகள் எதுவும் இல்லாததால் பொருளாதார சேதமோ, வேறு அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை என ஷார்ஜா போலீஸ் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...