Pages

Monday, April 3, 2017

அதிரை பேருந்து நிலைய வர்த்தகக் கடைகள் மீண்டும் பொது ஏலம் !

கோப்புப்படம்: கடந்த ஆண்டு பொது ஏலத்தின் போது எடுத்தது.
அதிராம்பட்டினம், ஏப்-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட 24 வர்த்தக கடைகள் பொது ஏலம் சென்ற ஆண்டு ( 03-03-2016 ) நடத்தப்பட்டன.

இதில் அதிரை காவல் நிலைய  அப்போது பொறுப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி ஏலத்தை நடத்தினார். இதில் மொத்தம் 109 பேர் தலா ரூ. 1 லட்சம் டிடி முன்வைப்பு தொகையையாக செலுத்தி ஏலத்தில் கலந்துகொண்டனர்.

ஈசிஆர் சாலை பகுதியை ஒட்டிய 14 கடைகளை பிளாக் பி எனவும், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை செல்லும் சாலையை ஒட்டிய கடைகளை பிளாக் ஏ எனவும் வகைப்படுத்தப்பட்டது.

குறைந்தபட்ச மாத வாடகை தொகையாக ரூ 500 லிருந்து ஏலம் கேட்பது தொடங்கியது. அதிகபட்சமாக ரூ 26,900 க்கும், குறைந்த பட்சமாக ரூ 8,100 க்கும் கடைகள் ஏலம் போனது.

ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில், அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாளை ஏப்-4 ந் தேதி (04-04-2017 ) செவ்வாய்க்கிழமை 24 வர்த்தக கடைகள் மீண்டும் பொது ஏலம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள நிபந்தனைகளில் கூறியிருப்பது:
1. ஏலதாரர்கள் முன்வைப்பு தொகையாக ரூ 1 லட்சத்திற்கான டிடியை 'செயல் அலுவலர், பேரூர் மன்றம், அதிராம்பட்டினம்' என்ற பெயரில் ஏப்-4 ந் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

2. அதிரை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 2015-16 ஆம் ஆண்டிற்கு முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும்.

3. ஒருவருக்கு ஒரு கடை, உறவினர்களுக்கு அனுமதியில்லை

4. கடையை உள் வாடகைக்கு விட அனுமதியில்லை

5. பேருந்து நிலையத்தில் கவரிங் கடை, பெட்டிக்கடை, முடி திருத்தும் கடை, பழக்கடை, செருப்பு கடை, டீ கடை, டிபன் கடை, ஜவுளி கடை உள்ளிட்டவை மாத்திரமே நடத்த வேண்டும். வேறு கடைகள் நடத்தக்கூடாது.

உள்ளிட்ட மொத்தம் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...