Pages

Sunday, April 9, 2017

கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவிற்கு மனிதாபிமான உதவிகள்

அதிரை நியூஸ்: ஏப்-09
கடும் உணவு பஞ்சத்தாலும், தண்ணீர் வறட்சியாலும் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவரும் சோமாலியா நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துவப் பொருட்களை வழங்கிடும் வகையில் சுமார் 2.8 மில்லியன் திர்ஹங்களை திரட்டுவதற்கான பணிகளில் துபையில் செயல்படும் 'தார் அல் பெர் சொசைட்டி (Dar Al Ber Society, DABS) எனும் அரசுசார் சமூக தொண்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.

மொகாதிசு நகரில் செயல்படும் அல் பெர் மருத்துவமனைக்கு (Al Ber Hospital in Mogadishu) தேவையான மருந்துப் பொருட்கள், சத்துநீர் திரவங்கள் (Fluids), நோயாளிகள் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு உணவுகள் வழங்கிட 5,70,000 திர்ஹங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் அமீரகவாசிகளிடம் பெறப்படவுள்ள 2.8 மில்லியன் திர்ஹங்களை கொண்டு அரிசி, மாவு பொருட்கள், பேரீத்தம் பழங்கள், சீனி, பால், பிஸ்கட்டுகள், சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப்பொதிகளை (Food packs) பஞ்சத்தால் பாதித்துள்ள சோமாலிய மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும், பரம்பரை பரம்பரையாக பிறருக்கு கொடுத்து மகிழும் குணமுடைய அமீரக மக்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை தந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...