Pages

Tuesday, April 11, 2017

இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு சில்க் ரோடு ரயில் சேவை துவக்கம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்-11
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குலகையும் சீனாவையும் இணைக்கும் வர்த்தக பாதை நிலைபெற்றிருந்தது, இதற்கு வரலாறு 'சில்க் ரோடு' (பட்டுச் சாலை) எனவும் பெயரிட்டு வைத்துள்ளது. நாடுகளிடையே நிலவும் இன்றைய நவீன எல்லைக்கோடுகள் இத்தகைய பாரம்பரிய சில்க் ரோடு போன்ற பதங்களை வெறும் வரலாற்று பக்கங்களுடன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

இந்த சில்க் ரோடு எனும் பாரம்பரியப் பாதையில் மீண்டும் வர்த்தகத்தை துவக்கிடும் வண்ணம் இங்கிலாந்தின் டிபி வேல்டு லண்டன் கேட்வே நிலையத்திலிருந்து (ஸ்டேன்போர்டு லீ ஹோப் - Stanford-le-Hope) ) சீனாவின் 'யீவு' (YIWU) நகருக்கு சுமார் 600 மீட்டர் நீளமுள்ள முதலாவது சரக்கு ரயில் 32 கண்டைனர்களுடன் இன்று போக்குவரத்தை துவங்கியது.

இந்த ரயில் ஃபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலாந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜாகிஸ்தான் வழியாக சுமார் 12,000 கிலோமீட்டர்களை கடந்து 18 நாட்களில் சைனா சென்றடையும்.

2013 ஆம் ஆண்டு முதல் சைனா மேற்கொண்டு வரும் 'ஒன் பெல்ட், ஒன் ரோடு' (One Belt, One Road) என்ற திட்டத்தின் கீழ் ஐரோப்பாவுடன் இணைக்கப்படும் 15 வது ரயில் மார்க்க திட்டம் இதுவாகும்.

இந்த கண்டைனர்கள் பெலாரஸ் நாட்டு எல்லையில் இறக்கப்பட்டு அகலப்பாதை ரயிலில் ஏற்றப்பட்டு பின்பு சீனா எல்லையில் இறக்கப்பட்டு மீண்டும் பழைய அளவு ரயில்வே தடத்தில் கொண்டு செல்லப்படும். வெறும் 2 மணிநேரத்தில் கண்டைனர் ஏற்ற இறக்கப் பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...