Pages

Wednesday, April 5, 2017

துபாயில் போக்குவரத்து அபராதம் தவணை முறையில் செலுத்தும் திட்டத்தில் மேலும் ஒரு வங்கி இணைந்தது !

அதிரை நியூஸ்: ஏப்-05
துபை ஒட்டுனர்களின் முக்கிய தலைவலிகளில் ஒன்று போக்குவரத்து அபராதம். இத்தகைய அபராதங்களை மொத்தமாக கட்டிவிட்டு வீட்டு செலவுக்கு பணம் அனுப்புவது உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். இதை இலகுபடுத்தும் விதமாக துபை போலீஸார் கடந்த ஆண்டு அபுதாபி கமர்ஷியல் பேங்குடன் (ADCB) இணைந்து தவணை முறையில் அபராதங்களை செலுத்தும் திட்டங்களை அறிமுகம் செய்தனர்.

இந்த தவணைமுறை திட்டம் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த வருட ஆரம்பத்தில் பஸ்ட் கல்ப் பேங்க் (FGB) மற்றும் கமர்ஷியல் இன்டர்நேஷனல் பேங்க் (CIB) ஆகியவையும் இணைந்தன. தற்போது எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்கும் (EIB) துபை போலீஸூடன் இணைந்து வட்டியில்லா தவணைமுறை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதே திட்டத்தை எமிரேட்ஸ் என்பீடி வங்கி (Emirates NBD) 2014 ஆம் ஆண்டு முதலே செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க் கிரடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இனி தங்களுடைய போக்குவரத்து அபராதங்களை 3, 6, 9 மற்றும் 12 மாதம் எனும் 4 தவணைகளில் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 500 திர்ஹம் என செலுத்தலாம். இந்த வசதியினை பெற துபை போலீஸ் ஆப் அல்லது துபை போலீஸ் இணையதளம் அல்லது நேரடியாக போக்குவரத்து சேவை மையத்திற்கு சென்றும் இந்த வங்கியின் கிரடிட் கார்டை பயன்படுத்தி செலுத்தலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...