Pages

Monday, April 3, 2017

பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணியை துரிதப்படுத்த ஜி.கே வாசனிடம் கோரிக்கை !

ஜி.கே வாசனுடன் எம்.எம்.எஸ் பகுருதீன், எம்.எம்.எஸ் ஜாஃபர்
அதிராம்பட்டினம், ஏப்-03
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசனை எம்.எம்.எஸ் பகுருதீன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணியை துரிதப்படுத்த ஜி.கே வாசனிடம் கோரிக்கை வைத்தார். அப்போது எம்.எம்.எஸ் ஜாஃபர் உடனிருந்தார்.

சந்திப்பு குறித்து நம்மிடம் கூறுகையில்;
'காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியை துரிதமாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை கவனத்திற்கு எடுத்துச்செல்ல வலியுறுத்தினேன். இதுதொடர்பாக தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்' என்றார்.

முன்னதாக தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் அவர்களை எம்.எம்.எஸ் பகுருதீன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எம்.எஸ் சம்சுதீன் உடனிருந்தார்.
 
 
 


4 comments:

  1. Dear brother Mr.G.K.Vasan is not a right person to execute your request and demand.

    ReplyDelete
  2. வாசனை இல்லா மலரிது !

    ReplyDelete
    Replies
    1. அது நுகர்வோரின் மூக்கை பொறுத்து இரால் கூட தன் தலையில் எதையோ வைத்துகொண்டு என்று ஏதோ சொல்வார்கள் ...அது புரிந்தவர்களுக்கு புரியும்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...