Pages

Sunday, April 16, 2017

குப்பை தரும் பரிசு! மாலத்தீவுக்கு இலவசமாக சுற்றுலா செல்லலாம்!!

அதிரை நியூஸ்: ஏப்-16
குப்பையில் கிடக்கின்ற மாணிக்கம் என்பது பழைய வழக்குச்சொல்! இப்போது குப்பையை ஒழுங்காக கையாண்டால் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல இலவச விமான டிக்கெட்டும் இன்ன பிற பரிசுகளும் கிடைக்குங்க!

ஷார்ஜா மற்றும் துபையில் குறிப்பிட்ட சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிரத்தியேக குப்பைத் தொட்டியில் குப்பைகளை போட்டுவிட்டால் போதும் இலவச அதிர்ஷ்டக் குலுக்கலில் உங்கள் பெயர் வரலாம், எப்படி?

முதலில் Bee’ah என்ற செயலியை (App) தரவிறக்கம் செய்து அதில் உங்களுடைய கணக்கு ஒன்றை துவக்குங்கள். பின்பு ஷார்ஜா மற்றும் துபையில் வைக்கப்பட்டுள்ள Bee’ahவின் சின்னம் பொறிக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மென்பான கேன்களை மறுசுழற்சிக்காக போடுங்கள்.

பின்பு அந்தக் குப்பைத் தொட்டியின் திரையில் ஒரு குறியீட்டு எண் ஒன்று வரும். அந்த குறியீட்டு எண்ணை உங்களுடைய Bee’ah App வழியாக ஸ்கேன் (Scan) செய்யுங்கள். அது அந்த மாத குலுக்கலில் உங்களின் பெயரை சேர்த்துவிடும்.

இந்தத் திட்டம் ஷார்ஜா அரசால் மறுசுழற்சி மற்றும் குப்பை மேலாண்மை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இது விரைவில் அமீரகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Bee’ah குப்பைத் தொட்டிகளை எங்கு காணலாம்?
ஷார்ஜா அமெரிக்கன் யூனிவர்ஸிட்டி, அல் திப்பா மாநகராட்சி, துபை சர்வதேச விமான நிலையம், துபை மரீனா மால் மற்றும் அல் மஜஸ் ஆகிய இடங்களில் காணலாம். மிக விரைவில் அல் கஸ்பா மற்றும் துபை டிஸைன் டிஸ்ட்ரிக்ட் ஆகிய பகுதிகளிலும் நிறுவப்படவுள்ளன.

எனவே, வாய்ப்புள்ளோருக்கு மீண்டும் சொல்கிறோம் 'கோழிக்கு தெரியுமா குப்பையில கிடக்கிற மாணிக்கத்தின் மதிப்பு' என்கிற பழமொழிக்கு நீங்களே உதாரணம் ஆகிவிடாமல், இம் ஆகட்டும் துவக்குங்கள், பறக்கலாம் மாலத்தீவு!

சென்ற மாத குலுக்கலில் ஜலால் என்பவருக்கு இருவர் பாரீஸ் சென்று வர டிக்கெட் பெற்றுள்ளார். எட்வர்டோவுக்கு ஒரு ஐபோன், அபூபக்கருக்கு ஒரு நெஸ்பிரஸ்ஸோ மெஷின், லியனோரா மற்றும் அஸன்கா இருவரும் உலகின் மிக உயரமான கட்டிடமான புரூஜ் கலீபா உச்சிக்கு சென்றுவர இலவச டிக்கெட்டையும் வென்றுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...