Pages

Wednesday, April 12, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் கணிதவியல் மன்ற ஆண்டு விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணிதவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் கணித மன்ற ஆண்டு நிறைவு விழா 11.04.2017 செவ்வாய்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவில் கணிதவியல் துறை இணைப்பேராசிரியர் டி.லெனின் வரவேற்றுப் பேசினார். கணிதவியல் துறைத்தலைவர் எஸ்.சந்திரசேகரன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.எம்.உதுமான் முகையதீன் வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரி முன்னாள் கணிதவியல் துறை மாணவரும், பட்டுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளருமான ஜி.சத்தியநாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணிதத்தின் பயன்பாடுகள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

கல்லூரி கணிதவியல் முன்னாள் மாணவரும், கணினி அறிவியல் துறைத்தலைவருமாகிய பேராசிரியர் என்.ஜெயவீரன், கணிணி அறிவியல் துறை பேராசிரியர்கள் ஏ.சேக் அப்துல் காதர், ஜெ.சொக்கலிங்கம் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் கணிதத்தினால் தாங்கள் அடைந்த பயன்களை மாணவ, மாணவிகளுக்கு சிறப்புரையாக வழங்கினார்கள்.

கணிதவியல் துறை சார்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை கணிதவியல் துறை இணைப்பேராசிரியர் என்.வீரபாண்டியன் உதவிப் பேராசிரியர்கள் எஸ்.அப்பாஸ், எம்.சுமதி மற்றும் சுயநிதிப் பிரிவு உதவிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் கணிதவியல் துறை மாணவிகள் வி.பூஜாஸ்ரீ, ஜி.கனிமொழி ஆகியோர்  தொகுத்து வழங்கினார்கள். இளநிலை கணிதவியல் மூன்றாமாண்டு மாணவி வி.விஜயஜனனி நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...