Pages

Wednesday, April 12, 2017

சவூதியில் கட்டாய மருத்துவ காப்பீடு திட்டம் அமல் !

அதிரை நியூஸ்: ஏப்-12
சவுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைவருக்குமான கட்டாய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் இறுதிக்கட்டப்பணிகள் நிறைவுற்று ஏப்ரல் 10 முதல் அமுலுக்கு வந்துள்ளதாக சவுதி சுகாதார காப்பீட்டு கவுன்சில் (The Council of Cooperative Health Insurance - CCHI) அறிவித்துள்ளது.

கடைசி மற்றும் 4 ஆம் கட்டமாக நடைபெற்ற ஓருங்கிணைந்த கட்டாய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி, 25 மற்றும் அதற்கும் குறைவான வெளிநாடு மற்றும் சவுதிய ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்கள், அனைத்து ஊழியர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும். இதில் ஆண் குழந்தைகள் 25 வயது வரையும் பெண் குழந்தைகள் அவர்களுக்கு திருமணமாகும் வரை இச்சலுகையை பெற உரிமையுள்ளது. நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு செய்ய மறுப்பது தற்போது சட்டப்பூர்வ குற்றமாகவும்.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பமான இந்த ஒருங்கிணைந்த கட்டாய மருத்துவ காப்பீட்டுப் பணிகளில் முதற்கட்டமாக 100 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்களும், இரண்டாம் கட்டமாக 50லிருந்து 99 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களும், மூன்றாம் கட்டமாக 25லிருந்து 49 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களும் இத்திட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு பதிவு செய்யப்பட்டனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...