Pages

Wednesday, April 12, 2017

அதிரையில் பழ. கருப்பையாவுக்கு வரவேற்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-12
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அனைத்து சமுதாயத்தவர் பங்கேற்கும் மாபெரும் மனித நல்லிணக்க மீலாது விழா பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிந்தனை பேச்சாளர் பழ. கருப்பையா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம் அபூபக்கர் எம்.எல்.ஏ, தஞ்சாவூர் ஆற்றாங்கரை ஜும்மா பள்ளி தலைமை இமாம் மவ்லவி அப்துல் ரஹ்மான் மன்பஈ, பாதிரியார் ஆ. அருளானந்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை அதிராம்பட்டினத்திற்கு வருகை தந்துள்ள பழ. கருப்பையாவுக்கு அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், செயலர் வழக்கறிஞர் முனாப், பொருளாளர் சேக் அப்துல்லா,  மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, துணைச்செயலர் முஹம்மது அபூபக்கர், இ. வாப்பு மரைக்காயர் மற்றும் திமுக அதிரை பேரூர் துணைச்செயலாளர் தில்லை நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...