Pages

Wednesday, April 5, 2017

அதிரையில் தமாகா பேரூர் நிர்வாகிகள் கூட்டம் !

அதிராம்பட்டினம், ஏப்-05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்கிழமை இரவு அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சி அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் ஒப்புதலின் பேரில்,
தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன் பரிந்துரையின் பேரில், அக்கட்சியின் மாநில மீனவரணி தலைவர் பி.ஜி நளமகாராஜன், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவர் ஏ.கண்ணனை தமாகா மீனவர் அணி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக அண்மையில் நியமனம் செய்தார். கூட்டத்தில் புதிய பதவியில் நியமிக்கப்பட்ட ஏ.கண்ணனுக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடக்கத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு வரவேற்று கூட்ட முடிவில் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், எம்.எம்.எஸ் அன்வர், வீரப்பன், புஹாரி, சகாதேவன், உசேன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...