Pages

Saturday, April 8, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் சார்பில் ஒரு மாதகால கம்யூனிகேசன் மற்றும் போட்டித் தேர்வுக்கான திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி ( Career Guidance and Placement Cell ) நிறைவு விழா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையம், பட்டுக்கோட்டை சாய் பயிற்சி நிறுவனம் (SAI Institute of Career Studies, Pattukkottai) ஆகியோர் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்புகளில் 75 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இப்பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு நேர் காணலை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், ஆங்கிலத்தில் உரையாடுவதற்கான பயிற்சி குறித்தும், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற தேவையான வழிமுறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஏ.எம். உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் வரவேற்றார். சாய் பயிற்சி மையத்தின் இயக்குனர்கள் லட்சுமி நாராயணன், சி.திருஞானம் வாழ்த்துரை வழங்கினார்கள். விழா முடிவில் பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...