Pages

Tuesday, April 18, 2017

அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்தின் மீது சேவைக் கட்டணம் உயர்வு !

அதிரை நியூஸ்: ஏப்-18
அமீரகத்தில் பல வெளிநாட்டவர்களும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளோம் மேலும் இத்தகையவர்களில் அனேகமானோர் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றும் தொழிலாளர்களே, இவர்கள் மூலம் கணிசமான தொகை அன்னிய செலாவணி வருவாயாக சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

உயர்ந்து வரும் விலைவாசியை கருத்திற்கொண்டு அமீரகத்திலிருந்து எக்சேஞ்சுகள் வழியாக அனுப்பப்படும் பணத்திற்கான சேவைக்கட்டணத்தை சுமார் 7 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளதாக அமீரகத்தில் செயல்படும் Foreign Exchange and Remittance Group (FERG)எனும் எக்ஸ்சேஞ்சுகள் கூட்டமைப்பின் பொருளாளர் ராஜிவ் பஞ்சோலியா அறிவித்துள்ளார் என்றாலும் இந்த சேவைக் கட்டண உயர்வு விஷயத்தில் ஒவ்வொரு எக்ஸ்சேஞ்சுகளும் தனிப்பட்ட வகையிலேயே முடிவு எடுத்து அறிவிக்குமே தவிர அது கூட்டமைப்பின் முடிவாக அறிவிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.(அரசின் மீதான பயம் காரணமாக இருக்கலாம்)

1000 திர்ஹம் மற்றும் அதற்கும் கீழ் அனுப்பப்படும் பணத்திற்கு இதுவரை 15 திர்ஹம் சேவைக்கட்டணம் செலுத்தி வந்த நிலையில் இனி 1 திர்ஹம் கூடுதல் சேர்த்து 16 திர்ஹங்களாக செலுத்த வேண்டும், அதுபோல் 1,000 திர்ஹத்திற்கு மேல் பணம் அனுப்புபவர்கள் இனி 20 திர்ஹத்திற்கு பதிலாக 22 திர்ஹம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேவேளை, யூஏஈ எக்ஸ்சேஞ்சின் தலைமை செயல்  அதிகாரி பிரமோத் மன்காட் குறிப்பிடும் போது, தொழிலாளர்களை அதிகம் பாதிக்காத வகையில் 1000 திர்ஹத்திற்கு கீழ் பணம் அனுப்புவோரிடமிருந்து சுமார் 7 சதவிகிதத்திற்குள்ளாகவே ஏற்றப்பட்ட சேவைக் கட்டணம வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். உலகளவில் சுமார் 7.5 சதவிகித சேவைக் கட்டணம் பெறப்படும் நிலையில் அமீரகத்தில் 2.5 சதவிகித அளவு தான் பெறப்படுவதாகவும் ஒப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு (அன்னியச் செலாவணி எனும்) பணம் அனுப்புவதில் 2016 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி அமீரகம் உலகின் 4வது பெரிய நாடாக விளங்குவதாகவும், ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் அளவுக்கு பிற நாடுகளுக்கு பணம் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...