Pages

Thursday, April 13, 2017

அதிரையில் மனித நல்லிணக்க மிலாது விழா பொதுக்கூட்டம்: நேரடி ரிப்போர்ட் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-13
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அனைத்து சமுதாயத்தவர் பங்கேற்ற மனித நல்லிணக்க மீலாது விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. ஷேக் அப்துல்லாஹ் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை வழிநடத்திச் சென்றார்.

திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் ஜலீலா எஸ்.எம் முஹம்மது முகைதீன், கடற்கரைத்தெரு ஜமாஅத் துணைத் தலைவர் அகமது ஹாஜா, தரகர் தெரு ஜமாஅத் தலைவர் ஆப்ரீன் நெய்னா முஹம்மது, மகிழங்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப்பு. மாறன் ( எ) சிவாஜி, ஏரிபுறக்கரை ஊராட்சி பஞ்சாயத் தலைவர் பக்கிரிசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மூத்த தலைவர் கே.எஸ்.ஏ அப்துல் ரஹ்மான், மிலாரிக்காடு பஞ்சாயத் தலைவர் பி.முத்துசாமி, புதுமனைத்தெரு எம்.எம் அப்துல் ஜப்பார், செட்டித்தோப்பு பஞ்சாயத் தலைவர் பி. நடராஜன், முத்தம்மாள் தெரு பஞ்சாயத் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிந்தனை பேச்சாளர் பழ. கருப்பையா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம் அபூபக்கர் எம்.எல்.ஏ, தஞ்சாவூர் ஆற்றாங்கரை ஜும்மா பள்ளி தலைமை இமாம் மவ்லவி அப்துல் ரஹ்மான் மன்பஈ, பாதிரியார் ஆ. அருளானந்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி சேக் நசுருதீன், பாராளுமன்ற முன்னாள் ஏ.கே.எஸ் விஜயன், கிருஷ்ணசாமி, மாவட்டத் தலைவர் பி.எஸ் ஹமீது, மாவட்டச் செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல்ஆபிதீன், மாவட்டச் துணை செயலாளர் எம்.ஜே அப்துல் ரவூப், பொருளாளர் ஏ. அப்துல் காதர்,  திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் செயலாளர் வழக்குரைஞர் ஏ. அப்துல் முனாப், மமக அதிரை பேரூர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் சமூக சேவையாளர்கள் பேராசிரியர் எஸ்.பர்கத், என்.ஆறுமுகச்சாமி, சேக்கனா நிஜாம் என்கிற எம். நிஜாமுதீன் ஆகிய மூவருக்கு காயிதே மில்லத் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல்ஹமீது வாசித்தார்.

அவை பின்வருமாறு;

1. அதிராம்பட்டினத்தை தலைமையிடமாகக்கொண்டு தாலுகா அறிவிக்க வேண்டும்:
அதிராம்பட்டினம் பகுதியில் தாலுகா அமைப்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒரு காலத்தில் இப்பகுதி மிகப்பெரும் வாணிபப்பகுதியாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் இருந்துள்ளது. இப்பகுதியில் விவசாயிகள், மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இப்பகுதியில் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிக்கூடங்கள் ஆகியன அமைந்துள்ளது. அதிராம்பட்டினத்தை சுற்றி அதிக கிராமங்கள் உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினத்தை தலைமையிடமாகக்கொண்டு தாலுகா அலுவலகம் புதிதாக அமைக்க வேண்டும்.

2. தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம்:
அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அடிக்கடி வாகன விபத்து நிகழ்கிறது. இதில் காயமடைந்தோருக்கு முதலுதவி, மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதில் தாமதம் ஏறபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை அதிராம்பட்டினத்தில் தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.

3. அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம்:
அதிராம்பட்டினம்  மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதியில் தீ தடுப்பு, கனமழை, வெள்ளம் போன்ற அபாய பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் நோக்கில் இப்பகுதி விவசாயி, மீனவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

4. பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை:
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாகிய பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை திட்டப்பணிகளை விரைந்து முடித்துதர மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

5. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் உயர்கோபுர கலங்கரை விளக்கம் அமைக்க கோரிக்கை:
அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். இவர்கள் படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு இரவு நேரத்தில் அதிராம்பட்டினம் துறைமுகம் திரும்பும்போது திசை தெரியாமல் சில மீனவர்கள் வேறு துறைமுகப் பகுதிக்கு சென்று விடுகின்றனர். எனவே அதிராம்பட்டினம் துறைமுகப் பகுதியில் உயர் கோபுர கலங்கரை விளக்கம் அமைத்து கொடுத்தால் அந்த கலங்கரை விளக்கின் வெளிச்சத்தில் மீன் பிடித்துவிட்டு வரும் மீனவர்கள் திசை மாறாமல் குறிப்பிட்ட நேரத்தில் துறைமுகம் வந்து சேர்வார்கள். எனவே அதிராம்பட்டினம் துறைமுக பகுதியில் கலங்கரை விளக்கம் அமைத்து தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது' என  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முஹம்மது நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் இந்திய யூனியின் முஸ்லீம் லீக், திமுக, காங்கிரஸ், மமக ஆகிய கட்சியினர், ஜமாத்தார்கள், கிராம பஞ்சயாத்தார்கள் உட்பட ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

விழா துளிகள்:
1. சிறப்பு விருந்தினர் பழ. கருப்பையா தனது உரையில் இஸ்லாம் மார்க்கத்தின் மேன்மை குறித்தும், நபிகள் நாயகம் வரலாறு குறித்தும், இஸ்லாம் மதத்தவர் மீது மத்திய ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திவரும் வெறுப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.

2. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர், கே.ஏ.எம் அபூபக்கர் எம்.எல்.ஏ தனது உரையில்; அதிராம்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் ஆகிய கடலோரப்பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களிடம் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து கூறினார். மேலும் காதிர் முகைதீன் கல்லூரி இப்பகுதி கல்வி வளர்சியில் பெரிதும் உதவி வருகிறது எனவும், இக்கல்லூரி மேலும் வளர்ச்சியடைய தாம் உதவத் தயார் என்றும் கூறினார்.

3. இப்பொதுக்கூட்டத்தின் நோக்கம் குறித்து அக்கட்சி பொருளாளர் கவிஞர் ஷேக் அப்துல்லா தனது வரவேற்புரையில்; மனிதர்களிடையே இணக்கமான சூழல், சகிப்பு தன்மை, அன்பு பாராட்டுதல், வெறுப்புகளை ஒதுக்கிவைத்தல் போன்ற உன்னத நோக்கங்களை வலியுறுத்துவதற்காக 'மனித நல்லிணக்கம்' என்ற பெயர் வைக்கப்பட்டு இப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் காயிதே மில்லத் விருதுகள் பெற்ற சாதனையாளர்கள் குறித்து தான் இயற்றிய வெண்பா வரிகளை வாசித்து அசத்தினார்.

4. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.எஸ் விஜயன், கிருஷ்ணாசாமி ஆகியோர் தாமாக முன்வந்து இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

5. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களின் பொதுநலன் சார்ந்த 5 முக்கிய தீர்மானங்களும் கூடத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல்ஹமீது வாசித்த போது பார்வையாளர்கள் வரவேற்றனர்.

6. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற 9 கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் விழா நடந்தது.

7. விழாவில் முக்கிய விருந்தாளிகள் சுமார் 100 பேருக்கு 'நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு' நூல் அன்பளிப்பு செய்யப்பட்டன.

8. மேஸ்திரி ஜாகிர் தலைமையில் பிரியாணி உணவு தயாரிக்கப்பட்டது. விநியோகப்பொறுப்பை குலாப்ஜாமூன் அன்சாரி ஏற்றார்.

9. மமக தொழிற்சங்க அதிரை பேரூர் தலைவர் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் உணவு பொட்டலங்களை பேக்கிங் செய்ய பெரிதும் உதவினார்கள்.

10. வழக்கம் போல் கூட்ட இடைவேளையில் குலாம் தஸ்தகீர் தயாரிப்பில் ஜல்கோபியா மூலிகை டீ வழங்கப்பட்டது.

பொதுக்கூட்ட களத்திலிருந்து அஜீம் 


 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...