Pages

Saturday, April 8, 2017

நார்வேயில் முதன்முறையாக கப்பல் செல்ல மலையை குடைந்து சுரங்க வழிப்பாதை !

அதிரை நியூஸ்: ஏப்-08
பொதுவாக மலையை குடைந்து நடைபாதை, ரயில்வே லைன்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்கான சாலைகள் அமைக்கப்படும் ஆனால் முதன்முதலாக நார்வே நாட்டில் மலையை குடைந்து பெரும் கப்பல்கள் கடந்து செல்லும் டனல் (Tunnel) பாதையை அமைக்கவுள்ளனர்.

நார்வேயின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்டட் தீபகற்ப (Stad Peninsula) கடற்பகுதி பலத்த காற்றும் ஆக்ரோஷமான அலைகளையும் உடையது இதனால் பழுத்த அனுபவமுடைய கப்பலோட்டிகள் கூட காற்றின் வேகம் குறையும் வரை காத்திருந்து இந்த தீபகற்ப பகுதியை கடப்பது வழக்கம். எனவே, இந்த ஆக்ரோஷமான கடல் பிராந்தியத்தை தவிர்த்துவிட்டு பெரும் கப்பல்களும் தங்களுடைய பயணத்தை சுமூகமாக தொடரும் வகையில் மலையை குடைந்து கடல் வழி சுரங்கப் பாதையை அமைக்க நார்வே அரசு திட்டமிட்டுள்ளது.

சுமார் 1.7 கி.மீ (1 மைல்) நீள தூரத்திற்கும் 36 மீட்டர் அகலத்திலும் 2.7 பில்லியன் குரோனர் (295 மில்லியன் யூரோக்கள், 315 மில்லியன் டாலர்கள்) செலவில் அமைக்கப்படவுள்ள இந்த டனல் 4 ஆண்டுகளில் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வரும்போது சுமார் 16,000 டன் எடையுள்ள பிரமாண்ட கப்பல்கள் கூட இதில் பயணிக்க முடியும்.

இதற்குமுன் இதுபோல் பிரான்ஸில் கேனல் டு மிடி (Canal du Midi) எனும் கடல்வழி டனல் அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் படகு போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வருகின்றன. நார்வே அமைக்கவுள்ள டனல் வழியாகத் தான் உலகின் முதல் கப்பல் போக்குவரத்து நடைபெறவுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...