குவைத் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் எம்.பி ஸபா அல் ஹாஷம். இவர் அடிக்கடி வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரான சர்ச்சை மிகுந்த கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர்.
இவர் ஏற்கனவே வெளிநாட்டு ஊழியர்கள் சாலையில் நடந்து செல்வதற்கான வரிகள் உட்பட பல வகையான வரிகளை விதிக்க வேண்டும் என்றும் அவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் கோரியவர் அதன் தொடர்ச்சியாக தற்போது வெளிநாட்டவர்களுக்கு ஒரு வருடம் புதிய டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் மீண்டும் போர்க்குரல் எழுப்பியுள்ளார். அதேவேளை வீட்டு டிரைவர்களுக்கான லைசென்ஸை மட்டுமே தடையின்றி வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, வெளிநாட்டவர்களின் டிரைவிங் லைசென்ஸ் வேலைவாய்ப்பு அனுமதியுடன் (work permit) இணைக்கப்பட வேண்டும், இதன் மூலம் ஊழியரின் முதலாளியே டிரைவரின் சேவை தேவையில்லை என கருதும் போது லைசென்ஸையும் சேர்த்து ரத்து செய்யும் வசதியை பெற முடியும் என்றும்,
குவைத் எம்பஸி மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் சான்றழிக்கப்பட்ட (Attested) சொந்த நாட்டு லைசென்ஸ் இல்லாமல் புதிதாக குவைத்தில் டிரைவிங் பழகி லைசென்ஸ் எடுக்க விரும்புபவர்களுக்கும் லைசென்ஸ் கொடுக்கக்கூடாது, குவைத் லைசென்ஸ் இல்லாதவர்கள் சொந்தமாக வாகனம் வைத்திருக்கவும் அனுமதிக்கக்கூடாது, குவைத் லைசென்ஸ் உள்ளவர்கள் ஒரு வாகனத்திற்கு மேல் வைத்திருக்க அனுமதியளிக்கக்கூடாது என கூறியுள்ளார்.
இவரது கோரிக்கையை ஒரு சில எம்.பிக்கள் மட்டுமே ஆதரிக்கும் நிலையில் பெரும்பான்மையான எம்.பிக்களும் பொதுமக்களும் ஆதரிக்கவில்லை என்பதே தற்சமயம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மிகப்பெறும் ஆறுதல் தரக்கூடிய செய்தியாகும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஆணவத்தின் வெளிப்பாடு. இவர்களின் அராஜகத்தை அடக்க இன்னொரு சதாம் ஹுசைன் வருவார்.
ReplyDelete