Pages

Wednesday, April 5, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் SSLC, +2 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான மேற்படிப்பு - வேலைவாய்ப்பு ஆலோசனை கருத்தரங்கம் !

காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பாக ஆலோசனை வழங்க கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 06.04.2017 அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தஞ்சாவூர் நகர பகுதி மாணவர்களுக்கு பாரத் கலை மற்றும்அறிவியல்  கல்லூரியிலும், பட்டுக்கோட்டை நகர பகுதி மாணவர்களுக்கு ஏனாதி இராஜப்பா கல்லூரியிலும், கும்பகோணம் நகர பகுதி மாணவர்களுக்கு தாராசுரம் கே.எஸ்.கே பொறியியல் கல்லூரியிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

06.04.2017 அன்று பத்தாம் வகுப்பு தஞ்சாவூர் நகர பகுதி மாணவர்களுக்கு டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியிலும், கும்பகோணத்தில் ஸ்ரீசரஸ்வதி பாடசாலா மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு ஸ்ரீ கயிலை மாமுனிவர் சதாபிஷேக திருமண அரங்கிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

07.04.2017 அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு பரிசுத்தம் பொறியியல் கல்லூரியிலும், 10ம் வகுப்பு பயிலும் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு தஞ்சாவூர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

பின்வரும் ஒன்றியங்களில் பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடைபெறும் இடங்கள் வருமாறு: 
பூதலூர் ஒன்றியம் - செங்கிப்பட்டி ரம்யா சத்யநாதன் பாலிடெக்னிக் கல்லூரி. திருவையாறு ஒன்றியம் - திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியிலும், மதுக்கூர் ஒன்றியத்தில் மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், பேராவூரணி ஒன்றியத்தில், பேராவூரணி ளு.சூ.ஏ திருமண மண்டபத்திலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் அதிராம்பட்டிணம் காதிர் முகைதீன் கல்லூரியிலும், திருவோணம் ஒன்றியத்தில் திருவோணம் நவீனா மேல்நிலைப் பள்ளியிலும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரத்தநாடு லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரத்தநாடு சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கும்பகோணம் ஒன்றியத்தில் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியிலும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் ஆவணியாபுரம் கிரஸன்ட் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் ஒன்றியத்தில், பாபநாசம் ஆர்.டி.பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் அம்மாப்பேட்டை ரெஜினாசீலி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கருத்தரங்கு  நடைபெற உள்ளது.

திருவிடைமருதூர் ஒன்றியத்தில் ஆடுதுறை ஸ்ரீ கே.ஜி. எஸ் மேல்நிலைப் பள்ளியிலும்,  பாபநாசம் ஒன்றியத்தில் இராஜகிரி தான்ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் அம்மாப்பேட்டை உக்கடை அப்பாவுத் தேவர் மேல்நிலைப் பள்ளியிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு  கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்தக் கருத்தரங்கு கூட்டத்தில் மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்களின் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு குறித்து அறிந்து பயன்பெறலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...