Pages

Saturday, April 8, 2017

அதிரையில் TNTJ மாவட்ட மாநாடு பணிகள்: நேரடி ரிப்போர்ட் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-08
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் 'முகமதுர் ரசுலுல்லாஹ்' (ஸல்) மாவட்ட மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள பிரமாண்ட மைதானத்தில் நாளை ஏப். 9 ந் தேதி ( 09-04-2017 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக அவ்வமைப்பின் மூத்த தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன், மாநில பொதுச்செயலாளர் எம். முஹம்மது யூசுப், பேச்சாளர்கள் அஷ்ரப்தீன் ஃபிர்தெளஸி, சேப்பாக்கம் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர்.

இதையொட்டி அதிராம்பட்டினம் ஆதம்நகர் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள பிரமாண்ட மைதானத்தில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் களப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

1. மாநாட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2. சிறப்பு விருந்தினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் அமரும் வகையில் 2400 சதுர அடியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

3. இரவை பகலாக்கும் வகையில் அதிக ஒளி தரக்கூடிய மின்விளக்குகள் மாநாட்டு திடலில் பொருத்தப்பட்டுள்ளது.

4. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே தொழுகை இடவசதி, ஒளு செய்வதற்கு, கழிவறை வசதிகள் உள்ளிட்டவை மாநாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5. மாநாட்டு திடல் அருகே 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவக்குழுவினரின் சிறப்பு மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. குழந்தைகளுக்கு இலவச பசும்பால் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

8. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. மாநாட்டு திடலில் 20 க்கும் மேற்பட்ட துரித உணவகங்கள், இஸ்லாமிய மார்க்க நூல்கள் அடங்கிய ஸ்டால்கள் இடம் பெற உள்ளன.

10. வாகனங்கள் நிறுத்துவதற்கு பிரத்தியோக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் ஆங்காங்கே தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளனர்.

11. மாநாட்டு திடலில் தவ்ஹீத் ஜமாஅத் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் அணிவகுத்து காட்சியளிக்கின்றன.

மாநாட்டு திடலிலிருந்து அஜீம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. சமுதாய நிகழ்வோடு மாநாடு கண்டிருந்த அமைப்பினரின் தற்போது நடைபெறப்போகும் மாநாட்டின் தலைப்பு காண்போரின் புருவத்தை சற்று உயர்த்துகிறது. சாமானிய மனிதரின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வு திருமணம் அதற்க்கு இவர்கள் கேட்க்கும் கேள்விகள் சொல்லிமாளாது எதற்க்கெடுத்தலும் ரசூலுல்லாஹ் அப்படி செய்யவில்லை ... அப்படி நடக்க வில்லை ... றஸூலுல்லாஹ்வுக்கு புறம்பானது ... மாற்றுமதத்தினரை பின்பற்றுகிறார்கள் ... என்னய்யா... வாழ்க்கையில் ஒரு கல்யாணம் .. அவன் எளிமையாக செய்யப்போனாலும் அதில் கேள்விகேட்டு.. நக்கல் அடித்து அவர்களின் திருமண அழைப்பிதழை புறம்தள்ளுவார்கள்.. போதாதா குறைக்கு தங்கள் வீட்டு முன்பு எழுதப்படாத சட்டம் ஓன்று எழுந்திருப்பார்கள் ... பார்த்திருக்கிறோம்

    ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்களின் காலத்தில் இப்படியொரு மாநாடு நடந்ததா?? என்ற கேள்வியை ஆரம்பித்து ஒவ்வொரு ஏற்பாடும் இப்படியும் அவர்களின் காலத்தில் நடந்திருக்குமா என்ற கேள்வி மனதில் வரத்தான் செய்கிறது. சரி; மாநாட்டில் சமுதாய பிரச்சனைகள் பற்றி அலசுவார்களா .. அதற்கான முயற்சிகள் வடிவம் பெறுமா? மாநாட்டிற்கு வருபவர்களின் தாகம் தீரலாம் ஆனால் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுமா ?. தெருமுனை பிரச்சாரத்தை விட மாநாட்டில் திருப்புனை ஏற்படுமா? பொறுத்திருப்போம் . நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...