Pages

Monday, May 29, 2017

சவூதியில் புகையிலை பொருட்களுக்கு 100% வரி விதிப்பு !

அதிரை நியூஸ்: மே 29
சவுதியில் பட்ஜெட்டில் நிலவும் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாய் சிகரெட் போன்ற புகைப்பொருட்கள் (Tobacco Products) மற்றும் சக்தி பானங்கள் (Energy Drinks) மீது 100% வரியும், மென் பானங்கள் (Soft Drinks) மீது 50% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு 15 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதேபோன்றே அமீரகத்திலும் வரிவிதிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் தான் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரி விதிப்பின் மூலம் சுமார் 8 முதல் 10 பில்லியன் ரியால்கள்வ ரை வரி வருவாய் கிடைக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்த வரிகள் அனைத்தும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் அந்தந்த தொழிற்கூடங்களை விட்டு வெளியேறும் போதும், வெளிநாட்டு பொருட்களின் மீதான வரி துறைமுகங்களை (விமான நிலையம், கப்பல் துறைமுகம் மற்றும் தரைவழி நுழைவு) விட்டு வெளியேறும் போதும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு (2018) ஜனவரி முதல் 5 வாட் வரியும் நடைமுறைக்கு வரவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலையில் சரிவு!

அதிரை நியூஸ்: மே 29
அமீரகத்தில் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப சில்லறை பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் ஆரம்பம் முதல் சரிவு கண்டிருந்த பெட்ரோல் விலையில் கடந்த மாதம் தான் 6 காசுகள் விலையேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் மாதத்திற்கான பெட்ரோல் சில்லறை விலையில் மீண்டும் 5 காசுகளும் டீசல் விலையில் 7 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் சென்ற மாத விலை ஒப்பீட்டுக்காக.

சூப்பர் 98 : திர்ஹம் 1.96 (2.01)
சூப்பர் 95 : திர்ஹம் 1.85 (1.90)
ஈ பிளஸ் : திர்ஹம் 1.78 (1.83)
டீசல்  : திர்ஹம் 1.90 (1.97)

தற்போது உலகளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 52.15 டாலருக்கும் அமெரிக்காவில் பேரல் ஒன்று 49.80 டாலருக்கும் விற்பனையாகி கொண்டுள்ளன.

கடந்த 2016 டிசம்பர் மாதம் முதல் ஒபெக் நாடுகளுக்கு இடையே 6 மாத காலத்திற்கு செய்யப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளொன்றுக்கு 1.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு தொடரும். மேலும் ஓபெக் அமைப்பில் சேராத ரஷ்யா தலைமையிலான நாடுகள் நாளொன்றுக்கு 558,000 பேரல் உற்பத்தியை குறைத்துள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அதிரை பைத்துல்மால் 24 ஆண்டுகால சேவைத் திட்ட சிறப்பு மலர் வெளியீடு ( படங்கள் )

அதிராம்பட்டினம், மே 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின்
சார்பில் ஏழை, எளிய, நலிவடைந்த உள்ளூர் பொதுமக்கள் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், ஏழை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, சிறுதொழில் தொடங்க வட்டியில்லாத கடனுதவி, மருத்துவ உதவி, சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல், ஆம்புலன்ஸ் வசதி, ஆண்டுதோறும் ஃபித்ரா அரிசி விநியோகம், தையல் இயந்திரங்கள், கிரைண்டர் வழங்குதல் உள்ளிட்ட சேவைத் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜனாஸா ( இறந்த உடல் ) நல்லடக்கத்திற்கு பயன்படுத்தும்  தரமான மரக்கட்டைகள் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் ஆற்றிய பொதுநல சேவைப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறும் வகையில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து சிறப்பு மலரை வெளியிட்டார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் மற்றும் ஏனைய நிர்வாகிகள் - உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

அனைவரும் வாசிக்கும் வகையில் கையடக்கமாக சிறப்பு மலர் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2000 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் நிர்வாகக்குழு பட்டியல், அதிரை பைத்துல்மாலின் சேவைத் திட்டங்கள், நிர்வாகத்தின் கனிவான வேண்டுகோள், 24 வருடங்கள் ஆற்றிய சேவை திட்டங்களின் புள்ளியல் விவரங்கள், புகைப்படங்கள், கொடையாளர்கள் - பயனாளிகள் தொடர்புகொள்ளும் முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள.

இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துமால் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிரை பைத்துல்மால்  24 ஆண்டுகால சேவைத் திட்ட சிறப்பு மலர் நூல்:
 
 
  
 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைவானை கலக்கும் 'ஃபாரஸ்ட் பஸ்' (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 29
தைவானில் இயற்கை செடி கொடிகளால் அலங்கரிப்பட்ட பாரஸ்ட் பஸ் (Forest Bus) என்றழைக்கப்படும் பஸ் ஒன்று இலவச சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 20 பேர் பயணிகள் இருக்கையுடன் கூடிய இந்த பஸ் தற்போது தைபேயின் 3 முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது.

நறுமண மலர்களின் வாசனையுடன் காட்டுக்குள் பயணம் செய்யும் அனுபவத்தை வாரி வழங்கும் இருக்கை நெருக்கடி இல்லாத இந்த பஸ்ஸை பெரும்பாலான பொதுமக்களும், சுற்றுலாவாசிகளும் வரவேற்றுள்ளதை தொடர்ந்து அடுக்குமாடி பஸ்களிலும் இயற்கை காடுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளார்கள்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 

புதிய இடத்திற்கு இடம் மாறும் துபாய் தேரா மீன் மார்க்கெட் !

அதிரை நியூஸ்: மே 29
தற்போது வரை இயங்கி வரும் தேரா பிஷ் மார்க்கெட் பல நூற்றாண்டு கால துபை வரலாற்றை தன்னுள்ளே கொண்டு நவீனமயமானது, அறிவிக்கப்படாத சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒரு முடிவு உள்ளது என்ற அடிப்படையில் இந்த பாரம்பரியமிக்க தேரா மீன் மார்க்கெட்டும் தனது இறுதி மூச்சை விரைவில் நிறுத்திக் கொள்ளவுள்ளது.

மூடப்படும் இந்த தேரா மீன் மார்க்கெட்டிற்கு பதிலாக 'வாட்டர் பிரண்ட் மார்க்கெட்' (Water Front Market) எனப்படும் புதிய அதிநவீன மார்க்கெட் எதிர்வரும் 2017 ஜூலை 9 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. கடலிலிருந்து நேரடியாக பிரஷ் மீன்களை மார்க்கெட்டிற்குள் இறக்கும் வசதியுடன், மார்க்கெட்டிற்கு சொந்தமான ஐஸ் பிளான்ட், நவீன மீன் சுத்தம் செய்யுமிடம், மார்க்கெட் முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளதுடன் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதுடன் அந்த நாற்றங்கள் மார்க்கெட்டை விட்டு வெளிப்புறம் வெளியேறாத வசதியும் செய்யப்பட்டுள்ளனவாம்.

காய்கறி ஸ்டால்கள், மட்டன் சிக்கன் ஸ்டால்கள், உலர்மீன் ஸ்டால்கள், மளிகை கடைகள் என அனைத்தும் நவீன வசதிகளுடன் இங்கும் அணிவகுக்க உள்ளன. தூரம் அதிகமில்லை கொஞ்சம் அருகில் தான் இடம் மாறுகிறது என்பது சற்றே தேரா வாசிகளுக்கு ஆறுதலே.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 
 

Saturday, May 27, 2017

பட்டுக்கோட்டையில் 342 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் !

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கோமளவிலாஸ் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் 342 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (27.05.2017)  வழங்கினார்.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு நில அளவைத்துறையில் பணியாற்றி பணியிலிருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணையும், சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் காசோலை, 220 நபர்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து  சாலை விபத்து நிவாரண நிதியுதவி 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரமும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை, தேசிய முதியோர் உதவித் தொகை 10 பயனாளிகளுக்கு ரூ.1.20த்திற்கான  ஆணையும், வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண் இடுபொருள் 10 நபர்களுக்கு ரூ.22,944 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 5 நபர்களுக்கு இடுபொருட்களும், வருவாய்த் துறையின் மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ.4,73,040 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைபட்டாவும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னணு ஸ்மார்ட் கார்டும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கான ஆணையும் ஆக மொத்தம் 342 பயனாளிகளுக்க ரூ.1,17,63,784 மதிப்பீட்டில்  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது;

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் அரசு மக்களை தேடி மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென்று உத்திரவிட்டிருந்தார்.  மக்களுக்காகவே அரசு என்ற கொள்கையின் அடிப்படையில் ஆட்சி செய்தார்கள்.  அதன் வழியில் வந்த அரசு  சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அம்மா அவர்கள் 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் 4 கிராமலிருந்து 8 கிராமாக உயர்த்தி ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.  தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் இன்று திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் முதன் முதலாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, பேராவூரணி, திருவோணம் ஆகிய 6 ஒன்றியங்களைச் சோர்ந்த 220 பயனாளிகளுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.  கர்ப்பிணி தாய்மார்க்களுக்கு உதவித்தொகை 6 ஆயிரமாக இருந்ததை 12 ஆயிரமாக உயர்த்தியதும், 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தியதும் மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் தான்.  இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பெற்று கருத்தடை செய்து கொண்டால் தலா ரூ.25,000 வீதம் ரூ.50000 நிதியுதவி வழங்கும் திட்டத்தையும், இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தை பிறந்தால், 3 பெண் குழந்தைகளுக்கு சேர்த்து ரூ.75000 வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தவர் மறைந்த மாண்புமிகு  முதலமைச்சர் அம்மா அவர்கள் தான்.

இந்த திட்டங்கள் எல்லாம் ஏழை எளிய மக்கள் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டது.  பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதி வண்டி, சீருடைகள், பாடப்புத்தகம், கணித உபகரணம், புத்தக பை, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் என பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அர்ப்பணித்தார்கள்.  அம்மா அவர்கள் சுட்டிக்காட்டிய வழியில் தமிழக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படா வண்ணம் அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்.  இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜவஹர்பாபு, பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மலைஅய்யன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை கூட்டுறவு விற்பனை  சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மதுக்கூர் பால்வளத்தலைவர் துரை.செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் வெ.பாக்கியலெட்சுமி, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு அனைவரையும் வரவேற்று பேசினார்.  முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் மரிய ஜோசப் நன்றி கூறினார்.
 

மரண அறிவிப்பு ( ஏ.கே செய்யது முஹம்மது அவர்கள் )

அதிரை நியூஸ்: மே-27
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த நாசர் அலி, சேக்தாவூது, ஹாஜா நசுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், முத்தலிப், பைசுல்தீன் ஆகியோரின் மாமனாருமாகிய ஏ.கே செய்யது முஹம்மது அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (28-05-2017) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

புற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் உணவகத் தொழிலாளிக்கு உதவ கோரிக்கை !

அதிராம்பட்டினம், மே-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா ( 43 ). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற மனைவியும், 5 ம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன் மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதையடுத்து தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதில் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ரிஜினல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் 'ஹீமோதெரபி' மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

மருத்துவர்கள் 8 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தாகவும், இதுவரையில் 3 முறை மட்டும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு உள்ளதாகவும், ஒரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஆவதாகக் கூறினார். மருத்துவர்கள் அறிவுரையின் படி மேற்கொண்டு மீதமுள்ள 5 முறை கீமோதெரபி சிகிச்சை தொடர மொத்தம் ரூ 1.50 லட்சம் வரை செலவு ஆகும் என தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதால் கடந்த  சில மாதங்களாக வேலைக்கு செல்வது இல்லை. தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் இவரது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை உதவிக்காக நம்மிடம் நிதி உதவி கோரி உள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மீராஷா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : MEERASHA
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534560
IFSC: SBIN0014370

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9566554054

எதிஹாத் விமானத்தில் அப்பார்ட்மெண்ட் வீடு வசதி அறிமுகம் (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 27
ரைட் சகோதரர்கள் விமானம் எனும் பெயரில் முதன்முதலாக கண்டுபிடித்த பறக்கும் கூண்டை பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் பார்த்திருப்பீர்கள் ஆனாலும் ரைட் சகோதரர்களுக்கு (Wright Brothers) முன்னும் பலர் பல வடிவங்களை தயார் செய்து பறக்க முயற்சித்துள்ளனர், அந்த முயற்சியில் பலர் உயிரையும் இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முயன்றது சற்று வானில் பறக்க வேண்டும் என்பது மட்டுமே.

அந்த முன்முயற்சியாளர்களுக்கு இன்றைய நவீன விமானங்களை தரிசிக்கும் வசதி ஒருமுறை வழங்கப்பட்டால்.... என்ற ஒருபோதும் நடவாத கற்பனைக்கு முற்றுப்புள்ளியிட்டு நிகழ்காலதிற்குள் நுழைவோம்.

உலகின் பல்வேறு விமான நிறுவனங்கள் சக போட்டியாளர்களை சமாளிக்க டிக்கெட் விலை குறைப்பு செய்தும், லாபம் குறைவான சில தடங்களில் சேவைகளை ரத்து செய்தும் விமான சந்தையில் நிலைத்திருக்க முயலும் சூழலிலும் அபுதாபியின் எதிஹாத் விமான நிறுவனம் பல்வேறு உயர் வசதி விமானங்களை அறிமுகம் செய்த கொண்டே உள்ளது.

தற்போது எதிஹாத் விமான சேவையில் 10வது விமானமாக இணைந்துள்ள சூப்பர் ஜம்போ ஜெட் விமானமான ஏர்பாஸ் A380 ரக விமானத்தில் 9 முதல் வகுப்பு 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் வீடுகள், 70 பிஸ்னஸ் வகுப்பு ஸ்டுடியோ டைப் வீடுகள், ஒரு லாபி லவுன்ஞ் மற்றும் 415 எகனாமி வகுப்பு இருக்கைகள் என பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

எதிஹாத் விமான நிறுவனம் ஏற்கனவே லண்டன், நியூயார்க், சிட்னி போன்ற தடங்களில் சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் 380 ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில் கூடுதலாக பாரீஸிற்கும் சேவையை துவங்கவுள்ளது. எதிஹாத் நிறுவனத்தின் இந்த விமானமே; உலகின் முதல் பிரம்மாண்ட பயணிகள் போக்குவரத்து விமானம் என்ற பெயரை தற்போதைக்கு கைப்பற்றியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 
 

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...