Pages

Thursday, May 4, 2017

முறைகேடாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பெற்ற 2 ஓமானியர்கள் கைது!

அதிரை நியூஸ்: மே-04
பாகிஸ்தான், லாகூரில் உள்ள ஒரு மருத்துவமனை மூலமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட 2 ஓமானியர்கள் கைது செய்யப்பட்டனர் மேலும் இருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஓமானியர்களுடன் 2 மருத்துவர்கள் உட்பட 4 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

ஓமனில் கிட்னி, இதயம், நுரையீரல், கண்கள் மற்றும் கணையம் ஆகிய உடல் உறுப்புக்களை வழங்கும் கொடையாளர்கள் மிகவும் குறைவு. கடந்த ஆண்டு மட்டும் கிட்னி தானத்திற்காக காத்திருந்த சுமார் 40 பேர் கிட்னி கிடைக்காமல் மரணமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் பாகிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, எகிப்து போன்ற நாடுகளில் கிட்னி மற்றும் இதர உறுப்புக்களை பெரும் விலை கொடுத்து வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பாகிஸ்தானிய சட்டப்படி, கிட்னி கொடையை உறவினர்களுக்குள் மட்டுமே செய்து கொள்ளலாம் என்றாலும் சில மருத்துவர்களும், மருத்துவமனைகளும் காசுக்கு பேராசைப்பட்டு அப்பாவி ஏழைகளை ஏமாற்றி அவர்களிடமிருந்து கிட்னியை பெற்று உள்நாட்டு செல்வந்தர்கள் மட்டும் வெளிநாட்டினருக்கு சட்ட விரோதமாக பொருத்தும் சிகிச்சையில் ஈடுபடுகின்றனர்.

லாகூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை இதுபோன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல ஆண்டுகளாக கள்ளத்தனமாக ஈடுபட்டு வந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆள்பிடிக்கும் ஏஜென்டுகள் பலர் 2009 ஆம் ஆண்டு முதல் ஓமனில் செயல்பட்டு வருகின்றார்களாம். கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக வருவோரிடம் சுமார் 60 முதல் 70 லட்சம் பாகிஸ்தானிய ரூபாய்களை பெற்றுக் கொள்ளும் இந்த மருத்துவ திருடர்கள் கிட்னி தானம் தரும் ஏழைகளுக்கு விட்டெறிவது சுமார் 1 லட்சம் பாகிஸ்தானிய ரூபாய்களை மட்டுமே.

இதேபோல் கிட்னி திருட்டுக்கள் இந்தியாவிலும் ஆங்காங்கு இலைமறை காயாக நடைபெற்றும், அவ்வப்போது பிடிபட்டு வந்தாலும் 2013 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் பெங்களூருவில் நடைபெற்ற கிட்னி திருட்டு சம்பவங்கள் இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கியது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...