Pages

Tuesday, May 9, 2017

துபாயில் வருடத்திற்கு 2 முறை மட்டுமே சிறப்புத் தள்ளுபடி விற்பனை !

அதிரை நியூஸ்: மே-09
துபையின் சிறப்பம்சங்களுள் ஒன்று மக்களை ஈர்க்கும் வியாபாரமும் அதன் உத்திகளுமே! சிறப்புத் தள்ளுபடி எனும் ஒரு வகை வியாபாரம் வருடம் முழுவதும் வர்த்தக நிறுவனங்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை வருடத்திற்கு 2 முறை மட்டுமே என முறைப்படுத்தியுள்ளது துபை வர்த்தக திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான துறை.(Dubai Festivals and Retail Establishment - DFRE)

அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2 ஆம் நாள் மற்றும் மே மாதம் 18 முதல் 20 வரை 3 நாட்கள் என இரு காலகட்டங்களில் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்கு (Super Sale) அனுமதிக்கப்படும், சுமார் 30 முதல் 90 சதவிகிதம் வரை இந்தக் காலக்கட்டங்களில் தள்ளுபடி செய்து பல்வேறு பொருட்களும் விற்கப்படும்.

இதைத் தவிர மூடப்படும் வர்த்தக நிறுவனங்கள் ஏதாவது தள்ளுபடி விற்பனையை அறிவிக்க விரும்பினால் அந்த நிறுவனத்தின் லைசென்ஸை முற்றாக ரத்து செய்து விட்டு சிறப்பு அனுமதி பெற்ற பின்பே மேற்காணும் 2 காலகட்டங்கள் தவிர்த்த பிற நாட்களில் அறிவிக்க முடியும்.

Source: Khaleej Times / Msn 
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...