Pages

Monday, May 8, 2017

அமெரிக்கா விமான நிறுவனத்தின் தவறால் 4,828 கி.மீ தூரம் பறந்த பெண் பயணி !

அதிரை நியூஸ்: மே-08
அமெரிக்க விமான நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசைப் போலவே இனவெறிக்கும், அடாவடிக்கும் பெயர் பெற்றவை. சமீபகாலத்தில் அதிகமதிகம் வன்முறை குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் ஒரு பெண் பயணியை சுமார் 4,800 கி.மீ தூரத்திற்கு 'தவறுதலாக' பறந்து கொண்டு சென்ற 'முட்டாள்தன' செயலும் வெளிப்பட்டு சந்தி சிரிக்கின்றது.

பிரேஞ்சு மொழி மட்டுமே அறிந்த லூசி என்ற பெண் அமெரிக்காவின் நெவார்க் (Newark) விமான நிலையத்திலிருந்து பாரீஸ் செல்வதற்காக யுனைடெட் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் முன்பதிவு செய்திருந்தார். முன்பதிவு செய்திருந்தது போலவே லூசியும் விமான நிலையம் வந்தார் ஆனால் கடைசி நேரத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் கேட்டை மாற்றியது,

இந்த மாற்றம் குறித்து ஆங்கிலம் தெரியாத அவருக்கு முறையாக ஈமெயில் வழியாகவோ, குறுஞ்செய்தி வழியாகவோ அல்லது பிரேஞ்சு அறிவிப்பு மூலமாகவோ அறிவிக்கப்படவில்லை என்பதால் அவரும் தனது போர்டிங் பாஸில் குறிப்பிட்டிருந்த கேட் வழியாகவே ஊழியர் ஒருவர் போர்டிங் பாஸை ஸ்கேன் செய்தபின் லவுஞ் உள்நுழைந்தார்.

விமானத்திலும் ஏறியவர் தனது இருக்கையில் வேறு ஒருவர் அமர்ந்திருந்ததை விமான பணியாளர்களிடம் தெரிவிக்கும் வகையில் போர்டிங் பாஸை அவர்களிடம் கொடுத்துள்ளார், பொறுப்பாக நடந்து கொண்ட அவர்களும் வேறு ஒரு இருக்கையை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர் போர்டிங் பாஸை படிக்காமலேயே. விமானம் தரையிறங்கிய பின் விமான நிலையத்திற்குள் சென்ற பின் தான் தெரிந்தது அது பாரீஸ் அல்ல சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையம் என்று.

மீண்டும் 11 மணிநேரம் சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் காத்திருந்த பின் பாரீஸ் செல்லும் விமானத்தில் ஏற்றிவிடப்பட்டு மொத்தம் 28 மணிநேரத்தில் சுமார் 4,828 கி.மீ தூரம் அநியாயமாக சுற்றி வந்து சேர்ந்துள்ளார்.

அப்புறம் வழமைபோல் விளக்கெண்ணெய் விளக்கம், மன்னிப்பு, ஊழியர்கள் மீது நடவடிக்கை, சான் பிரான்ஸிஸ்கோவில் தங்கியதற்கான ஹோட்டல் பில் என வழமையான வழக்கத்தை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் செய்தது என்றாலும் கோர்ட்டுக்கு வெளியே இந்தப் பிரச்சனையை சுமூகமாக பேசி முடித்துக் கொள்வோம் என்றும் அறிவித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...