Pages

Saturday, May 13, 2017

அதிரையில் அதிகாலை இடியுடன் கூடிய பலத்த மழை: 6 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி !

அதிராம்பட்டினம், மே-13
அதிராம்பட்டினம் பகுதிகளில் அதிகாலை இடியுடன் கூடிய கனமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 6 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடும் வெப்பம் நிலவி வந்தது. கோடையின் உச்சம் என்று கருதப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கியது. இதனால் வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதிகளில் இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதையொட்டி, அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...