Pages

Tuesday, May 9, 2017

போரினால் பிரிந்த தந்தை - மகன் 6 ஆண்டுகளுக்கு பின் ஒன்றுசேர உதவிய அஜ்மான் ஆட்சியாளர் !

அதிரை நியூஸ்: மே-09
இன்று சிரியா என்றழைக்கப்படும் அன்றைய உடைபடாத ஷாம் தேசம் முஹமது நபி (ஸல்) அவர்கள் முதன்முதலாக வர்த்தகத்திற்கு சென்ற மண், எண்ணற்ற ஸஹாபா பெருமக்கள் வாழ்ந்த மண், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பல்லாயிரம் பேர் தோன்றிய மண், இஸ்லாம் கோலோச்சிய மண் ஆனால் இன்று அதன் கொடுங்கோல் ஆட்சியாளர்களாலேயே சின்னபின்னமாக்கப்பட்டு வெறும் கல், மண் குவியலாய் மாற்றப்பட்டு நித்தமும் ரத்தக்குளியலில் நனைந்து கொண்டுள்ளது.

பஷார் அல் அசத் எனும் ஷீஆ (அல்லாவி பிரிவு) கொலைகாரனுக்கு ஆதரவாக ரஷ்ய மிருகங்களும், ஐஎஸ்ஐஎஸ் எனும் இஸ்ரேலிய கூலிப்படைகளின் அட்டுழியமும், ஐஎஸ்ஸை அழிக்கிறேன் பேர்வழி என தன் பங்கிற்கு பொதுமக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க ஓநாய்கள் என சகலரும் முஸ்லீம்களை சுற்றிவளைத்து வேட்டையாடி வருகின்றனர். இந்த அநியாய சண்டையினுள் சிக்கி பலரைப் போல் ஒரு தந்தையும் மகனும் பிரிந்தனர் 6 ஆண்டுகளுக்கு முன்.

அஜ்மானில் வாழ்ந்து வரும் ஒரு சிரிய தேசத்து தந்தை ஆட்சியாளர் ஷேக் ஹூமைத் பின் ராஷித் அல் நுஐமி அவர்களிடம் தன் மகனை தன்னுடன் சேர்த்து வைக்க உதவுமாறு வேண்டிக் கொள்ள, மகனுக்கான விசாவை தானே வழங்கி அஜ்மானுக்கு வரவழைத்தார் அஜ்மான் ஆட்சியாளர் ஷேக் ஹூமைத்.

தந்தையை தனது அரண்மனைக்கு வரவழைத்து 6 வருடங்களாக பிரிந்திருந்த மகனை ஒப்படைத்தார் ஷேக் ஹூமைத். தந்தை மகனின் உணர்ச்சிமிகு சந்திப்பு கூடியிருந்தோர் கண்களையும் குளமாக்கியது, அஜ்மான் ஆட்சியாளர் உட்பட.

இதற்கிடையில், அமீரகம் வழங்கி மகிழும் ஆண்டாக 2017 ஆம் ஆண்டை கடைபிடித்து வருவதன் ஒரு பகுதியாக அஜ்மான் ஆட்சியாளரின் உதவியால் மகனுடன் இணைந்த தந்தைக்கு, அவருக்கு பிடித்தமான கார் ஒன்றை அல் ஹப்தூர் கார் விற்பனையகத்திற்கு விஜயம் செய்து தேர்வு செய்து கொள்ளலாம் என அழைத்துள்ளார் அமீரகத்தின் முன்னனி கார் டீலர்களில் ஒருவரான கலஃப் அல் ஹப்தூர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...