Pages

Friday, May 5, 2017

91 பேருடன் கடத்தப்பட்ட விமானத்தை பத்திரமாக மீட்ட துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹமது - ஆவண வீடியோ வெளியீடு !

அதிரை நியூஸ்: மே-05
1977 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பாலஸ்தீன போராளிக்குழு ஒன்றால் ஜெர்மனிக்கு சொந்தமான லுப்தான்சா எண்: 181 என்ற விமானம் ஸ்பெயனிலிருந்து புறப்படும் போது 4 பேரால் கடத்தப்பட்டு பல இடங்களையும் சுற்றிவிட்டு கடைசியாக எரிபொருள் நிரப்புவதற்காகவும், தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை எதிர்பார்த்தும் துபையில் தரையிறக்கப்பட்டது.

இன்றைய துபை ஆட்சியாளராக இருக்கும் ஷேக் முஹமது அவர்கள் அப்போது இளவரசராகவும் ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்த நிலையில் கடத்தப்பட்ட பயணிகள் 86 பேர் மற்றும் விமான ஊழியர்கள் 5 பேரையும் மீட்க களத்தில் இறங்கி எத்தகைய உயிர்ச்சேதமும் இன்றி பேச்சுவார்த்தையின் மூலம் வெற்றிகரமாக மீட்டார்.

கண்ட்ரோல் டவரிலிருந்து மிக அமைதியாக விமானக் கடத்தல்காரர்களுடன் பேசிய நிகழ்வின் வீடியோ பதிவுகளில் பதட்டமான நேரத்திலும் அமைதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது அவரது ஆளுமைத் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை குறித்த விபரங்கள் அனைத்தும் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததுடன் இது அமீரகத்தின் தேசிய ஆவணமாகவும் பாதுகாக்கப்பட்டு வந்தது தற்போது இன்ஸ்டாகிராம் எனும் சமூக தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

வீடியோவைக் காண: https://www.instagram.com/p/BTYs8akj4oc/

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...