Pages

Saturday, May 6, 2017

முதல் நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்டை அணி அபாரம்: இன்று மாலை களத்தில் இறங்கும் AFFA அணி !

கோட்டையூர் அணி
அதிராம்பட்டினம் மே-06
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 14 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி வெள்ளிக்கிழமை மாலை அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரில் கிராணி மைதானத்தில் தொடங்கியது.

முதல்நாள் ஆட்டத்தில் பிளாக் ப்ரண்ட்ஸ் கோட்டையூர் அணியினரும், புதுக்கோட்டை கால்பந்து கழகம் புதுக்கோட்டை அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2-0 என்ற கணக்கில் கோல் அடித்து புதுக்கோட்டை அணியினர் வெற்றிபெற்றனர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அரசின் கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர், கால்பந்தாட்ட கழக தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, அதிரை பேட்மிட்டான் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ் முஹம்மது இராஹீம், மஹல்லா இளைஞர் அமைப்பினர், AFFA நிர்வாகிகள் மற்றும் கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர், லியாகத் அலி ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து முதல்நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் எஸ்.ஐ.எஸ் முஹம்மது தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக ஷபானுதீனும் பணியாற்றினார்.

நேற்று நடந்த முதல்நாள் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

இன்று அதிரை AFFA பி அணியினரும், ஆலத்தூர் அணியும் விளையாட உள்ளனர். ஆட்டம் சரியாக 5 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...