Pages

Saturday, May 13, 2017

துபாயில் கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சிறப்புக்கூட்டம் ( படங்கள் )

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சிறப்பு கூட்டம் (12-05-2017) வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 7 மணியளவில் மாஷா அல்லாஹ் மிக சிறப்பான முறையில் தேரா தமிழ் பஜார் கோட்டை பள்ளிக்கு அருக உள்ள பஞ்சாப் தர்பார் ரெஸ்டாரண்ட் மாடியில் அறை எண் 303ல் (மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை ரூம்) நடைபெற்றது.

கூட்டத்தை தமீம் அன்சாரி அவர்கள் கிராத் ஓதி தொடங்கிவைத்தார். அமீரக அம்மைப்பின் துணைத் தலைவர் எம். அகமது அன்சாரி கூட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரவேற்றுப் பேசினார்.

அமீரக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.ஏ ஷாஹுல் ஹமீது தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். செயற்குழு உறுப்பினர் ஏ.எச் அப்துல் மாலிக் ஒற்றுமையின் அவசியம் குறித்து சிற்றுரை வழங்கினார்.

இச்சிறப்பு கூட்டத்தில் தாயகத்திலிருந்து வருகை தந்த கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் மௌலானா ஹாபிழ் எம்.ஜி சபியுல்லாஹ் அன்வாரி ஹஜ்ரத் அவர்கள் 'அமீரகவாழ் மக்களின் பொறுப்பு' என்ற தலைப்பில் பயனுள்ள வகையில் மிக சிறப்பான முறையில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

கூட்டத்திற்கு ஏராளமான கடற்கரைத்தெரு முஹல்லா வாசிகள் வருகை தந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கூட்ட முடிவில் அமீரக அம்மைப்பின் செயலாளர் எம். ஜாஹிர் ஹுசைன் கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த கடற்கரை தெரு முஹல்லா வாசிகள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும், கூட்டம் நடத்த இடமளித்து உதவிய மதுக்கூர் தவ்ஹித் தர்ம அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...