Pages

Tuesday, May 2, 2017

மழை வேண்டி அதிரையில் நடந்த சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்பட பலர் பங்கேற்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-02
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் வறண்டு காணப்படும் பகுதிகளுக்கு மழை பெய்ய வேண்டி, அதிரை ஈசிஆர் சாலை பிலால் நகர் கிராணி மைதானத்தில் சிறப்புத் தொழுகை செவ்வாய்கிழமை காலை 7 மணியளவில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலப் பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையை நடத்தினார். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வறட்சிப் பகுதிகளில் தாமதமின்றி மழை பொழிய வேண்டும், ஆடு, மாடு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கு பயன்தரும் மழையைப் பொழியவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனையில் கலந்துகொண்ட ஆண்கள் அனைவரும் தாங்கள் அணிந்து இருந்த சட்டையை திருப்பி அணிந்துகொண்டு, இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. மழை வேண்டி தொழுது விட்டு அப்படியே இருந்து விடாமல் மழையை வரவைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்

    நமது ஊரில் அதிகமான மரங்களை நடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

    நாம் முயற்சி செய்து விட்டு அல்லாஹுவிடம் உதவி கேட்டால் நிச்சியமாக அல்லாஹுவின் உதவி நமக்கு கிடைக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...