Pages

Wednesday, May 3, 2017

தஞ்சை மாவட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்களின் கட்டிடங்கள் ஆய்வு செய்ய குழு அமைப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் கட்டிங்கள்
ஆய்வு செய்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் உயர் கல்வி நிறுவனங்களின் கட்டிடங்கள் ஆய்வு செய்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (03.05.2017) நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர்கல்வி நிறுவன கட்டிடங்களை ஆய்வு செய்து அதன் உறுதி தன்மை குறித்து கண்டறிய மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவில் மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராகவும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர், நகர மற்றும் ஊரக திட்டக் குழுமம் உறுப்பினர்/ செயலர், தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கட்டுமான பொறியியல் துறை பேராசிரியர், ராஜாமடம், பட்டுக்கோட்டை ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவன கட்டிடங்கள் ஆய்வு செய்து அதன் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்ட உயர் மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் குழு உறுப்பினர்கள் அரசு வழிகாட்டுதலின்படி உயர் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து அவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.  தரம் குறைவான கட்டுமானப் பொருட்களை கொண்டு மேற்கொள்ளும் கல்வி நிறுவனங்கள் குறித்து மாவட்ட குழு தலைவர் என்ற முறையில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.  கட்டுமானப் பணி நடைபெறும் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, மாணவர்கள் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பிரேவேசிக்கா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வகுப்பறை செயல்பாடுகள், கட்டுமான பணிகளுக்கு மத்தியில் நடைபெறக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் ஆகிய விதிமுறைகளை இக்குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள், சுரேஷ் (தஞ்சாவூர்), ம.கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), கல்லூரி கல்வி மண்டல இயக்குநர், மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...