Pages

Sunday, May 7, 2017

ஓமன் கடலில் பல்லாயிரக்கணக்கான மத்தி மீன்கள் செத்து மிதப்பு!

அதிரை நியூஸ்: மே-07
ஓமன் தலைநகர் மஸ்கட் அருகேயுள்ள சிதாப் கடற்பகுதியில் (Sidab Area) திடீர் என சார்டின்ஸ் எனப்படும் மத்தி மீன்கள் பல்லாயிரக்கணக்கில் திடீரென செத்து மிதக்கின்றன. இதற்கான காரணத்தை ஆராய்ந்த மீன்வளத்துறையின் நிபுணர்கள் கடல் நீரில் ஆக்ஸிஜன் குறைந்து போனதே காரணம் எனக்கூறியுள்ளனர்.

இப்பகுதி கடலில் ஒரு வகை பாசிகள் அதிகரித்துக் காணப்படுவதால் 1.5 மற்றும் அதற்கு மேலும் இருக்க வேண்டிய கடல் நீரின் ஆக்ஸிஜன் அளவு 1.2 மட்டுமே இருப்பதாலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், மீன்கள் செத்து மிதப்பதற்கு கடற்பாதுகாப்பு படையே காரணம் என்று கூறப்படுவதை ராயல் ஓமன் போலீஸார் மறுத்துள்ளனர். இப்பகுதியில் கடற்பாதுகாப்புப் படை தனக்கான துறைமுகத்தை கட்டுமுன் சுற்றுச்சூழல் குறித்து போதிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையில், மீன்வளத்துறை அமைச்சகத்துடன் இணைந்து சிதாப் பகுதியின் நூற்றுக்கணக்கான மீனவர்களும் பொதுமக்களும் செத்து மிதக்கும் மீன்களிலிருந்து துர்நாற்றம் எழும்புமுன் அவற்றை சேகரித்து புதைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...