Pages

Saturday, May 6, 2017

அதிரையில் டிஎன்டிஜே கிளை புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் !

அதிராம்பட்டினம், மே-06
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-1 நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் அதிரை ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஜீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கிளைத் தலைவராக எம். நவாப்ஷா, செயலாளராக எஸ். ஹைதர்அலி, பொருளாளராக எஸ். அல்லா பிச்சை, துணைத் தலைவராக எஸ். அப்துல்வஹாப், துணைச்செயலாளராக ஏ.செய்யது இபுராஹிம் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொடக்கத்தில் அவ்வமைப்பின் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு 'நிர்வாகிகளின் பன்புகள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் கிளை நிர்வாகிகளின் இஸ்லாமிய பிரசாரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...