Pages

Monday, May 8, 2017

வரி போட்டே ஆகணும்! தொடர்ந்து வலியுறுத்தும் குவைத் பெண் எம்.பி

அதிரை நியூஸ்: மே-08
நீங்க அடங்கவே மாட்டீங்களா எனக் கேட்கணும் போலத் தோணுகிறதா? என்னை சமாளிக்கவே முடியலையா என்று அவங்க கேட்டாலும் கேப்பாங்க! விடுங்க, விடுங்க நடப்பவை நன்மையாக இருக்கட்டும்.

குவைத் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 50 எம்.பிக்களில் ஒரே பெண் எம்.பி ஸபா அல் ஹாஷம் அவர்கள், வெளிநாட்டினர் தங்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணத்தின் மீது 3 முதல் 5 சதவிகிதம் வரை வரி விதிக்க வேண்டும், இந்த வரி வருமானத்தினால் ஓரளவு குவைத் உள்நாட்டு வர்த்தகமும் பொருளாதாரமும் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த வரி வருவாய் இன்றியே போதிய வருமானம் வருவதாகவும், இதுபோன்ற அநியாய வரிவிதிப்புக்களால் நாட்டில் கள்ளப் பண நடமாட்டமே அதிகரிக்கும் என குவைத் சென்ட்ரல் பேங்கின் கவர்னரும் எம்.பிக்களில் சிலரும் எதிர்கருத்து தெரிவித்துள்ளனர். குடும்பங்களை ஆண்டுக்கணக்கில் பிரிந்திருந்து குவைத் நாட்டின் நலனுக்காக உழைப்பவர்களுக்கு செய்யும் கைமாறு இதுவல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

சென்ட்ரல் பேங்க் கவர்னரின் அறிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ள ஸபா அல் ஹாஷம். வீட்டு டிரைவர்கள், வீட்டுப் பணியாளர்கள் போன்ற அடித்தட்டு தொழிலாளர்களுக்கு 3 சதவிகிதமும் பிறருக்கு 5 சதவிகிதமும் வரி விதிக்கவும் பரிந்துரைத்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...