Pages

Thursday, May 11, 2017

தஞ்சை மாவட்டத்தில் உணவுபொருட்களில் கலப்படம் குறித்து வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்க அழைப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவுபொருட்களில் கலப்படம் குறித்து, பொதுக்கள் 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவிப்புசெய்துள்ளார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் (சென்னை) அவர்களின் உத்திரவின்படி பொது மக்களின் நலன் கருதி சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் உணவகங்கள், உணவு வணிக நிறுவனங்கள், காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிந்தால் பொது மக்கள் 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தி புகார்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து உணவு மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்து உணவு பொருட்களின் கலப்படம் என கண்டறியப்பட்டால் கடையின் விற்பனையாளர், உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சிறை தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...