Pages

Wednesday, May 17, 2017

அமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்புப் பார்வை ( வீடியோ )

அதிரை நியூஸ்: மே 17
அமீரகத்தில் பல்வேறு விசா தடைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கான தடைகள் நடைமுறையிலுள்ளன, அவற்றை குறித்து சுருக்கமான பார்வை;

1. நிரந்தர விசா தடை: Permanent Residency Ban
அமீரகத்தில் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மற்றும் வேலை செய்யுமிடத்திலிருந்து ஓடிப்போனவர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய முடியாது, இவர்களுடைய விபரங்கள், கண் மற்றும் கைரேகை ஸ்கேன் பதிவுகளை சம்பந்தப்பட்ட துறைகள் கவனமாக பாதுகாக்கும்.

2. லேபர் தடை: Labour Ban
a. ஓப்பந்தப் பணிக்காலம் முடிவடையும் நிலையில் தற்போதைய ஸ்பான்சர் அதே தொழில் தொடர்புடைய பிற நிறுவன வேலையில் தொடர தடை கோரல்.
b. ஒரே நபருக்கு 2 பேர் ஒரே சமயத்தில் விசாவிற்கு விண்ணப்பித்தல்
c. 1 வருடம் முடிந்த நிலையில் காலவரையற்ற பணி ஒப்பந்தத்தை இடைமுறித்தல்
d. காலக்கெடு குறிக்கப்பட்ட பணி ஒப்பந்த காலம் முடியுமுன் வேலையை இடைமுறித்தல்.

3. இமிக்கிரேஷன் தடை: Immigration Ban
கிரிமினல் குற்றவாளிகள், கடனாளிகள், செக் மோசடியில் ஈடுபட்டோர், கற்பழிப்பு குற்றவாளிகள், மது அருந்துவோர், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியோர், திருட்டில் ஈடுபட்டோர், கள்ளத் தொடர்புகளில் ஈடுபட்டோர் மற்றும் அமீரக அரசின் சட்டதிட்டங்களுக்கு எதிராக நடந்தோறுக்கும் விசா வழங்கப்படாது.

4. எம்ப்ளாயிமென்ட் தடை என்கிற ஒர்க் பெர்மிட் தடை: Employment Ban
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணியாற்றி முடிந்த பின் 6 மாதத்திற்கு அல்லது நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.

5. 6 மாதத் தடை: Six - Month Ban
முறையான காரணமின்றி வேலையை விட்டுச் செல்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனம் விரும்பினால் 6 மாத தடை கோரலாம் என்றாலும் அதே காலத்தில் விசிட் விசாவில் அல்லது டூரிஸ்ட் விசாவில் உள்ளே வரத் தடையில்லை.

6. ஒரு வருட தடை: One - Year Ban
லிமிடட் காண்ட்ரக்ட் எனும் வரையறுக்கப்பட்ட வேலை ஒப்பந்தம் முடியுமுன் வேலையிலிருந்து ராஜினாமா செய்தால் இந்த சட்டம் பாயும். தொழிலாளர் துறை அமைச்சகத்திற்கு எதிராக நீங்கள் வழக்கு தொடர்ந்திருந்து அதில் நீங்கள் தோற்றாலும் உடன் இந்த தடைச்சட்டம் அமுலுக்கு வரும். இதுபோன்ற நிலையில் எம்ப்ளாயர் எனும் ஸ்பான்ஸர் புதிய விசா விண்ணப்பம் செய்ய அல்லது விசா புதுப்பித்தலுக்கான நடைமுறைகளை முந்தைய விசா காலம் முடிவுறு முன்பே துவங்க வேண்டும் இல்லையேல் ஒரு வருட தடை நிச்சயம்.

விசா தடைகளை தவிர்ப்பது எப்படி? How to avoid getting a visa ban
உங்களுடைய விசா முடிவுறுமுன் அதை புதுப்பித்தலுக்காக நடவடிக்கைகளை உங்களுடைய எம்ப்ளாயர் துவங்க வேண்டும் மேலும் அதற்காக தொழிலாளர் துறை அமைச்சக அலுவலகத்திற்கும் அவர் செல்ல வேண்டும்.

வேறு நிறுவனத்திற்கு பணி மாற்றலாகி செல்வதாக இருந்தால் உங்களுடைய புதிய எம்ப்ளாயர் அதற்கான வேலைகளை துவங்க வேண்டும் அல்லையெனில் உங்களுடைய லேபர் கார்டு முதலில் தடை செய்யப்படும்.

உங்களுடைய அறிவே அனைத்திலும் சிறந்தது. எனவே, துபையில் அவ்வப்போது கொண்டு வரபடக்கூடிய புதிய விதிகள், விசா, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்ட திருத்தம் பற்றிய விஷயங்களை தவறாமல் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

விசா தடையை நீக்குவது எப்படி என்பது பற்றி விளக்கும் வீடியோ கிளிப்:


Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...