Pages

Tuesday, May 9, 2017

பட்டுக்கோட்டையில் தமுமுக-மமக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக மாவட்ட நிர்வாகிகள் தேர்வு !

பட்டுக்கோட்டை, மே-09
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த பொதுக்குழுக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தமுமுக- மமக ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் அப்துல் சமது தலைமை வகித்தார். தமுமுக பொதுச்செயலர் பி.எஸ் ஹமீது, மமக மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலர் எம். ஆர் கமாலுதீன் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் தமுமுக/மமக ஒருங்கிணைந்த மாவட்டத்தலைவராக அதிரை அஹமது ஹாஜா, தமுமுக மாவட்டச் செயலராக பட்டுக்கோட்டை ஷேக், மமக மாவட்டச் செயலராக மதுக்கூர் ஜபருல்லாஹ், தமுமுக/மமக பொருளாளராக இன்ஜினியர் இலியாஸ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொடக்கத்தில், மாநில ஊடகப்பிரிவு துணைச்செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் வரவேற்றுப்பேசினார். கூட்ட முடிவில் தமுமுக/மமக மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் மமக மாவட்டச் செயலர் எம். கபார் உட்பட பட்டுக்கோட்டை, அதிரை, மதுக்கூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுக, மாமகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...