Pages

Tuesday, May 9, 2017

அதிரையில் இலவசமாக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் விவரங்கள் !

அரசுக்கு சொந்தமான ஏரிகள், குளங்களில் விவசாயம் / வீட்டு உபயோகம் / மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு வண்டல் மண் / சுவடு மண் / களி மண் இலவசமாக எடுத்துக் கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்களில் வண்டல் மண் / சுவடு மண் / களி மண் ஆகிய கனிமங்களை விவசாயம் / வீட்டு உபயோகம் / மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு 5 வட்டங்களில் 10.05.2017 அன்று  வட்டாட்சியர் அலுவலகத்தில்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் பயன்பாட்டிற்கு நிபந்தனைக்குட்பட்டு இலவசமாக எடுத்துக் கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் ஏரிகள் குளங்களில் விவசாயம் / வீட்டு உபயோகம் / மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு வண்டல் மண் / சுவடு மண் / களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ள நிபந்தனைக்குட்பட்டு அனுமதி அளிப்பதற்கான சிறப்பு முகாம் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோடடை, பூதலூர் ஆகிய வட்டங்களில் 10.05.2017 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சிறுகனிமச் சலுகை விதிகள் 1959, விதி எண் 12(2)ன் கீழ் விவசாயிகள், பொது மக்கள் மற்றும் மண்பாண்ட செய்வோர் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு வண்டல் மண் சவுடு மண் களிமண் போன்ற கனிமத்தை கட்டணமில்லாமல் எடுத்துக் கொள்ள மனு செய்வதற்கான நிபந்தனைகள்

விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம் வண்டல் மண் / சவுடு மண் / களிமண் எடுக்க விண்ணப்பிக்கும் ஏரி/குளம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள வருவாய் கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும்.

விவசாயப் பயன்பாட்டிற்காக மண் எடுக்க விண்ணப்பம் செய்வோர் தங்களுடைய விவசாய நிலம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விவசாயப் பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டிற்கு ஒரு முறை 75 கன மீட்டருக்கு மிகாமலும் மற்றும் புன்செய் நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் / சவடு மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பொது மக்களின் சொந்தப் பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மண்பாண்டங்கள் செய்தவற்கான களிமண் எடுக்க விண்ணப்பம் செய்வோருக்கு 2 ஆண்டிற்கு ஒரு முறை 60 கன மீட்டருக்கு மிகாமல் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். விவசாயம், சொந்த மற்றும் மண்பாண்டம் செய்யும் பயன்பாட்டிற்கு மண் எடுக்க வழங்கப்படும் அனுமதிச் சீட்டு 20 நாட்கள் செல்லத்தக்கதாக இருக்கும்.

ஏரி/குளங்களில் மண் எடுக்க அனுமதி பெறுவோர் இயந்திர பயன்பாட்டுச் செலவு (ஜே.சி.பி பொக்லைன்) மற்றும் ஏற்றுக்கூலியாக வண்டல் மண் / சவுடு மண் /களிமண், கன மீட்டர் ஒன்றுக்கு ரூ.35.20 (ரூபாய் முப்பத்து ஐந்து மற்றும் பைசா இருபது மட்டும் ) சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் பதவியின் பெயரில் வங்கி கேட்பு வரைவோலையாக எடுத்துச் சமர்ப்பிக்க வேண்டும். மண் எடுக்க அனுமதி பெறுவோர் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏரி, குளங்களிலிருந்து மண் எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதிரையில் இலவசமாக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் - சர்வே எண் - அனுமதிக்கப்பட்ட மண் அளவு ( கனஅடியில்) விவரங்கள் : 
கல்லணைக் கால்வாய் கோட்டம்:
மஞ்சக்குடி ஏரி, அதிராம்பட்டினம், சர்வே எண் 189,  1250 கனஅடி
காசிரா ஏரி, அதிராம்பட்டினம், சர்வே எண் 85/1, 97/2,  1300 கனஅடி
மளவன் ஏரி, அதிராம்பட்டினம், சர்வே எண் 121/21, 750 கனஅடி
சிப்பி முறிச்சான் ஏரி, அதிராம்பட்டினம், சர்வே எண் 455/1, 455/2, 456/1, 520 கனஅடி
காசாவிளான் குளம், அதிராம்பட்டினம், சர்வே எண் 176/1, 176/7,  550 கனஅடி

ஏரிப்புறக்கரை பெரிய ஏரி, ஏரிப்புறக்கரை, சர்வே எண்: 135, 9500 கனஅடி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...