Pages

Sunday, May 14, 2017

முதல்சேரி கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை அணி சாம்பியன் !

அதிராம்பட்டினம், மே-14
அதிரை அருகே நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிராம்பட்டினம் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள முதல்சேரி எஸ்.பி. ஆர் மெம்ரியல் 5 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த மே.10 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC), பட்டுக்கோட்டை உட்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடியது.

தொடரின் இறுதிப் போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணி மற்றும் முதல்சேரி ஆகிய அணிகள் மோதியது. இதில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றது. இந்த அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கம் ரூ. 8008 பரிசாக வழங்கப்பட்டது.
 
 

1 comment:

  1. வெற்றிக்கு முதலில் வாழ்த்துக்கள்!

    குறைந்தபட்சம் பேன்ட் டி-சர்ட் போட்டிருந்தால் தான் ஒரு கெத்தான கிரிக்கெட் டீமாக தெரியும், இல்லே விளையாடியதே இப்படித்தானா?

    சாட்சாத் பாப்பம்பட்டி அணி லுக்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...