Pages

Tuesday, May 2, 2017

தஞ்சை மாவட்டத்தில் ஏரி / குளங்களிலிருந்து விவசாயத்திற்கு - மண்பாண்டங்கள் தயாரிக்க வண்டல் மண் தேவைப்படுவோர் விண்ணப்பிக்க அழைப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் 702 ஏரி, குளங்களிலிருந்து விவசாயத்திற்கு மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கும் வண்டல் மண் தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள 702 ஏரி/ குளங்கள் தூர்வாருதல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (02.05.2017) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் 702 ஏரி/குளங்கள் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக மழைநீரை சேமிக்க ஏரிகுளங்களை தூர்வாருதல் மிகவும் அவசியமாகும். அவ்வாறு தூர்வாரப்படும் வண்டல்மண் / சவடு மண் / களிமண் ஆகியவற்றை விவசாயிகள் வயல்களில் இடவும் பொதுமக்கள் சொந்த பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் தொழில் செய்வோர் மண்பாண்டங்கள் செய்யவும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பம் செய்து கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலவசமாக எடுத்துக்கொள்ள அரசாணை வழங்கப்பட்டள்ளது.

விண்ணப்பதாரரின் வீடு அல்லது விவசாய நிலம் வண்டல்மண்/சவடுமண்/களிமண் எடுக்க விண்ணப்பிக்கும் ஏரி/குளம் அமைந்துள்ள அதே அல்லது அருகாமையில் உள்ள வருவாய் கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும்.

விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்க விண்ணப்பம் செய்வோர் தங்களுக்கு விவசாய நிலம் உள்ளது என கிராம நிர்வாக அலுவரின் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விவசாய பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை 75 கனமீட்டர் முதல் 90 கனமீட்டர் (1 ஏக்கர் பரப்பில்) அளவு வரை வண்டல்மண்/சவடுமண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

சொந்த பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு அதிக பட்சமாக 30 கனமீட்டர் அளவு வரை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிவழங்கப்படும்.

மண்பாண்டம் செய்ய களிமண் எடுக்க விண்ணப்பம் செய்வோருக்கு அதிக பட்சமாக 60 கனமீட்டர் அளவு வரை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிவழங்கப்படும்.

விவசாயம், பொது மற்றும் மண்பாண்டம் செய்யும் பயன்பாட்டிற்கு மண் எடுக்க அதிகபட்ச்சமாக 20 நாட்கள் வரை அனுமதி வழங்கப்படும்.
இயந்திர செலவு மற்றும் ஏற்று கூலியாக 1 கனமீட்டர் வண்டல்மண்/சவடுமண்/களிமண், எடுக்க ரூ.35.20/- வீதம்  சம்மந்தப்பட்ட செயற் பொறியாளர் பெயரில் கேட்பு வரைவேலை எடுத்து சமர்ப்பிக்கவேண்டும்.

எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் கிராமம், அல்லது கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஏரி, குளங்களிலிருந்து வண்டல்மண்/சவடுமண்/களிமண் எடுக்க தங்களது விண்ணப்பங்களை உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தஞ்சாவூர் அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைத்து அனுமதி பெற்று பயன் அடையுமாறு ஆ.அண்ணாதுரை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், மூன்றாம் தளம் அறை 330-ல் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (கனிம வளம்) செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர்கள் ஏ.முகமது இக்பால் (காவிரி), ரேவதி (கல்லணை கால்வாய்), உதவி புவியியல் ஆய்வாளர் திரு.பெர்னார்டு திரு.இளங்கோவன் (வெண்ணாறு), செல்லமுத்து (அக்னியாறு), ஊரக வளர்ச்சி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...