Pages

Tuesday, May 2, 2017

இந்திய விமான படையில் ஏர்மேனாக பணிபுரிய ஆட்கள் தேர்வு; திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் !

அதிரை நியூஸ்: மே-02
இந்திய விமான படையில் பணிபுரிய விருப்பமுள்ள திருமணமாகாத இளைஞர்கள் வருகின்ற 20.05.2017 மற்றும் 22.05.2017 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம் என இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

இந்திய விமான படையில் ஏர்மேனாக பணிபுரிவதற்கு 20.05.2017 மற்றும் 22.05.2017 ஆகிய தேதிகளில் திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள இளைஞர்கள் 07.07.1997க்கும் 20.12.2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாகவும்,   திருமணம் ஆகாதவர்களாகவும்,  இந்திய பிரஜைகளாகவும்  இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 12ம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு வரும்போது 10 மற்றும் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். அசல் மதிப்பெண் சான்றிதழை கல்லூரியில் ஒப்படைத்திருந்தால், கல்லூரி முதல்வரிடமிருந்து அதற்கான சான்றிதழை பெற்று, நகல் மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

20.05.2017 அன்று காலை 6.00 மணி முதல் 10 மணி வரை மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், கரூர் ஆகிய தமிழக மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வு நடைபெறவுள்ளது.

22.05.2017 அன்று காலை 6.00 மணி முதல் 10 மணி வரை வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளுர், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும், விவரங்களுக்கு www.airmenselection.gov.in என்ற இணைய தளத்திலும், 044-22390561 மற்றும் 044-22395553 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...