Pages

Saturday, May 13, 2017

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்டம், ஆயுத படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறையின் மூலம் அனைத்து பள்ளி வாகனங்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  அவர்கள் தலைமையில் இன்று (13.05.2017) ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து தெரிவித்ததாவது:
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள 95 பள்ளிகளில் இயங்கி வரும்  479 பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்படுகிறது. இதில் தஞ்சாவூரில் உள்ள 60 பள்ளிகளில்  283 வாகனங்களும், பட்டுக்கோட்டையில் உள்ள 35 பள்ளிகளில் 196 வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதே போல் கும்பகோணத்திலும் பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஆய்வில் முக்கியமாக வாகன ஓட்டுநர்கள் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும்பொழுது செல்போன் பேசக் கூடாது. பள்ளி வாகனத்தில் அவசர நேரத்தில் வெளியேறுவதற்கான அவசர வழி, தீயணைப்பு கருவி, மருத்துவ உபகரணங்கள், ஓட்டுநர்களின் உரிமம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், வருவாய் கோட்டாட்சியர் த.சுரேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனன், போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார், பிரபாகரன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மணிமேகலா, மாவட்ட கல்வி அலுவலர் விமலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...