Pages

Thursday, May 4, 2017

துயருக்குப்பின் மீண்டும் புன்னகை சிந்தும் மாணவி !

அதிரை நியூஸ்: மே-04
தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு கோரத் (Korat) மாகாணத்தை சேர்ந்த பள்ளிக்கூட மாணவி 'நரூதீ ஜோஷன்தியா'. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இம்மாணவிக்கு விமானப் பணிப்பெண்ணாகி வானில் பறக்க வேண்டும் என்ற வண்ணக்கனவு 8 மாதங்களுக்கு முன் அவரது பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அவர் தலை மீது விட்டு எறிந்த தேனீர் கோப்பை தாக்குதலின் விளைவாக சிதறடிக்கப்பட்டது.

நரம்புகள் பாதிக்கப்பட்டதால் முகம் ஒரு பக்கம் கோணலாகி சரிவர பேச முடியவில்லை, கோணிக் கொண்ட வாயையும் மூட முடியவில்லை, இடது கண் இமையையும் மூட இயலவில்லை, கனவு கலைந்ததாகவே மாணவி நினைத்தார். கை கொடுத்தது ஒரு முன்னாள்அரசியல்வாதி ஒருவரால் நடத்தப்படும் Pavena Foundation எனும் தர்ம அறக்கட்டளை.

அந்த மாணவியின் குடும்பத்தார் வருடம் முழுவதும் சம்பாதிக்கும் ஒட்டுமொத்த வருமானத்தை போன்று 3 மடங்கு செலவில் தொடர் சிகிச்சையளித்ததால் முகம் மீண்டும் மீண்டுள்ளதுடன் வாயையும் கண் இமையையும் தற்போது மூட இயலுகின்றது. முழுமையாக குணம் பெற வேண்டி சிகிச்சையும் தொடர்கிறது, சிதைந்த கனவும் துளிர்விடத் துவங்கியுள்ளது. பள்ளிப்படிப்பும் இன்னொரு பள்ளிக்கூடத்தில் தொடர்கிறது.

சிகிச்சையால் மீண்டும் பிரகாசிக்கும் அவரது முகத்திற்கு பின்னே நடந்ததையும் தெரிந்து கொள்ளுங்கள்!

1. வழமைபோல் மீடியாக்கள் விவாதித்துவிட்டு அடுத்த பிரச்சனைக்கு போய்விட்டன, டிஆர்பி முக்கியம்.

2. சம்மந்தப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகம் 50,000 பாட் தாய்லாந்து பணத்தை மட்டும் (சுமார் 1,450 டாலர்) நஷ்டஈடாக கொடுத்து (தூக்கி கடாசி) விட்டு கடமையை முடித்துக் கொண்டது.

3. முக்கியமாக, தேனீர் கோப்பையால் தாக்கிய ஆசிரியர் மற்றொரு பள்ளிக்கூடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் தண்டிக்கப்பட்டு விட்டார்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...